பக்கம்:அலிபாபா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அலிபாபா


அஞ்சி, நான் மெளனமாயிருந்தேன். இதுதான் விஷயம். ஒருநாள் நம் வீட்டுக்கதவில் சுண்ணாம்புக்கட்டியால் யாரோ ஒரு வெள்ளை அடையாளம் செய்திருந்தனர். புதிதாக அதைப் பார்த்தவுடன், நான் வியப்படைந்தேன். உடனே ஒரு யோசனை செய்து, வேறு பல வீடுகளிலும் அதேபோல வெள்ளை அடையாளம் செய்துவிட்டேன். பிறகு, மற்றொரு நாள் நம்முடைய கதவில் மட்டும் சிவப்புக்குறி ஒன்றைக் கண்டேன். வேண்டுமென்று எவரோ இப்படிக் குறியிடுவதால், எந்த நேரத்திலும் உங்களுக்கு அபாயம் நேரும் என்று எண்ணி, நான் அதே சிவப்புக் குறியை மற்ற வீடுகளிலும் திட்டி வைத்தேன். இப்பொழுது நடந்ததையும் சேர்த்துக் கவனித்தால், வனத்திலுள்ள திருடர்களே நம் வீட்டில் குறியிட்டார்கள் என்பது தெளிவா கின்றது. முதலில் இருவர் வீட்டைப் பார்த்துவிட்டு, மறுபடியும் இதே வீட்டுக்கு வருவதற்காக இருமுறை அடையாளம் செய்திருந்தனர். நாற்பது திருடர்களில் மாண்டுபோன முப்பத்தேழு பேர்களைத் தவிர, மற்ற இருவரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. மூன்றாவது ஆசாமியான திருடர்கள் தலைவன் விஷயமாக இனி நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவன், இந்தத் தடவை சுவரேறிக் குதித்துத் தப்பிப் போய்விட்டான். இனி, அவன் உங்களை வஞ்சம் தீர்க்கவேண்டுமென்று கறுவிக்கொண்டேயிருப்பான். ஒரு முறை அவனிடம் நீங்கள் சிக்கினால், அப்புறம் உயிருடன் மீளமுடியாது. இங்கே எனக்குத் தெரிந்த அளவுக்கு நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/56&oldid=512503" இலிருந்து மீள்விக்கப்பட்டது