பக்கம்:அலிபாபா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருந்து, நடனம், மரணம்!

59



சமீபத்தில் நகரில் ஏதாவது விசேடமான செய்தி உண்டா என்றும் கேட்டான். சத்திர நிருவாகி என்னென்னவோ கதைகளைக் கூறினாரே தவிர, அலிபாபா வீட்டு நிகழ்ச்சி களைப்பற்றி அவன் எதிர்பார்த்த செய்தி எதுவும் அவர் வாயிலிருந்து வரவில்லை. அப்பொழுது அவன், அலிபாபா தன்னைவிடச் சிறந்த மூளையுடையவன் என்று உணர்ந்தான். நகரில் ஒரு மனிதனைக் கொலை செய்தால், செய்தவனுக்கு அரசாங்க அதிகாரிகள் மரண தண்டனை விதித்து, அவன் சொத்துகளைப் பறித்துக்கொண்டு, அவனுடைய வீட்டையும் தரைமட்டம் ஆக்கிவிடுவார்கள். ஆனால், அலிபாபா ஒரே சமயத்தில் பல உயிர்களைப் பலி வாங்கியவுடன், தான் செய்த முப்பத்தேழு கொலைகளையும் மூடி மறைத்துவிட்டானே என்று தலைவன் வியப்படைந்தான். அவ்வளவு வல்லமையுடையன் கையில் தானும் எளிதில் மாட்டிக்கொண்டுவிடக்கூடாது என்று அவனும் எச்சரிக்கை யாயிருந்தான்.

அவன் கடைத் தெருவிலே ஒரு பெரிய கடையை வாடகைக்கு எடுத்து, குகையிலே இருந்த உயர்ந்த ரகமான ஜவுளிகள் முதலிய பொருள்களை அங்கே கொண்டு வைத்து வியாபாரம் செய்து வந்தான். வியாபாரத்தில் அவனுக்குப் பலருடைய பழக்கம் ஏற்பட்டது. தன்னுடன் பழகிய வியாபாரிகளை அவன் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி வந்தான். அந்த வியாபாரிகளில் ஒருவன் அவன் கடைக்கு எதிர்ப்பக்கம் கடை வைத்திருந்தான். அவன்தான் அலிபாபாவின் சகோதரனான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/61&oldid=512506" இலிருந்து மீள்விக்கப்பட்டது