பக்கம்:அலிபாபா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

அலிபாபா



பார்த்து அவள், “விருந்தினருக்காக நாம் நடனமாட வேண்டும்!” உன் கஞ்சிராவை எடுத்துக்கொள்!” என்றாள்.

சிறுவன் கஞ்சிராவை குலுக்கிக்கொண்டு, முன்னே சென்றான். மார்கியானா ஜல்ஜல் என்று காற்சலங்கைகள் ஒலிக்க, ஒய்யாரமாக அவனைத் தொடர்ந்து சென்றாள். இருவரும் விருந்தினர் அறைக்குள் புகுந்து, தலை வணங்கி விட்டு, ஒதுங்கி நின்றனர். அவர்களைக் கண்டதும் அலிபாபா மகிழ்ச்சியடைந்து, “சரிதான், விருந்தில் நடனமும் அவசியம்தான், நடக்கட்டும்!” என்றான். குவாஜா ஹஸன், “பிரபுவே, அறுசுவை உண்டிக்குப்பின் ஆனந்த நடனமும் அளிக்கிறீர்கள்!” என்று மெச்சினான். உடனே, அப்துல்லா கஞ்சிராவைத் தட்டி முழங்கத் தொடங்கினான். அவனுடைய தாளங்களுக்கு ஏற்ப, கட்டழகி மார்கியானா, தோகை மயில்போல் துள்ளிக் குதித்து ஆடினாள். அவளுடைய ஆட்டமும் வளைவுகளும் குழைவுகளும் கண்களைக் கவர்வனவாயிருந்தன. சிறிது நேரத்திலேயே அவள் நடனக்கலையில் தனக்கிருந்த பயிற்சியைத் தெளிவாகக் காட்டிவிட்டாள். பின்னர், தாளம் மாறியவுடன், அவள் இடையிலிருந்த பிச்சுவாவை உருவி வலக்கையிலே வைத்துக்கொண்டு புதிய நடனம் ஒன்றை ஆடிக்காட்டினாள். வலக்கையிலே அந்தக் கூரிய ஆயுதம் பளபளவென்று ஜொலித்துக்கொண்டிருந்தது. அதை ஏந்தியவண்ணம் அவள் வலப்புறமும் இடப்புறமும் சாய்ந்து. நிமிர்ந்து, ஒடி. அங்கே வீற்றிருந்தவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/68&oldid=512512" இலிருந்து மீள்விக்கப்பட்டது