பக்கம்:அலிபாபா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருந்து, நடனம், மரணம்!

71


துக்கிக்கொண்டு செல்லும்பொழுது எல்லாப் பொருள்களும் எப்படி எப்படி இருந்தனவோ அப்படி அப்படியே இருக்கக் கண்டான். ஆகவே, இனிமேல் தனக்குத் திருடர்களின் பயமே இல்லையென்றும் அவன் உணர்ந்தான். மேலும், குகையைத் திறக்கும் ‘ஸிம் ஸிம்’ மந்திரம் தெரிந்தவன் உலகிலே அவன் ஒருவன்தான் என்றும் ஆகிவிட்டது. குகைக்கு வந்தமட்டிலும், வெறுங்கையோடு திரும்ப வேண்டாமென்று, அவன் தன் குதிரை சுமக்கக்கூடிய அளவுக்குப் பொற்காசுகளை அள்ளிக் கட்டிக்கொண்டு திரும்பிச் சென்றான்.

பிற்காலத்தில் அவன் தன் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் குகைக்கு அழைத்துக்கொண்டு போய் எல்லாவற்றையும் காட்டினான். குகையைத் திறக்கவும் அடைக்கவும் பயன்படும் மந்திரச் சொற்களையும் அவர்களுக்கு மனப்பாடம் செய்து வைத்தான். இவ்வாறு, அலிபாபாவும், அவன் குடும்பத்தினரும், என்றும் வற்றாத செல்வத்துடன், நகரத்திலே பல மேன்மைகளையும் பெற்று. இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/73&oldid=512535" இலிருந்து மீள்விக்கப்பட்டது