பக்கம்:அலிபாபா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விறகுவெட்டியும் நிதிக்குவியலும்

7



குதிரைகளில்வந்தவர்கள் வல்லமை மிக்க வாலிபர்கள். அவர்கள் கொள்ளைக்காரர்கள் என்பதைப் பார்த்தவுடனேயே அலிபாபா தெரிந்துகொண்டான். எங்கோ சாலையில் சென்றுகொண்டிருந்த வணிகர்களைக் கொள்ளையடித்து, கைப்பற்றிய பணத்தையும் பொருள்களையும் வனத்திலே ஒரு குகையில் மறைத்து வைப்பதற்காக, அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். எல்லோரும், தங்கள் குதிரைகளை, அலிபாபா அமர்ந்திருந்த மரத் தினடியில் நிறுத்திவிட்டுத் தாங்கள் கொண்டு வந்திருந்த கோணிப்பைகளைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கி நடந்து சென்றார்கள். பைகளில் ஏராளமான பொன்னும் வெள்ளியும் இருந்ததை அலிபாபா ஒரளவு கவனித்துக்கொண்டான். அவர்கள் மொத்தம் நாற்பது பேர்கள் இருந்தார்கள் என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். அவர்களின் தலைவனாக காணப்பெற்ற திருடன், மற்றவர்களுக்கு முன்னால், முள்ளிலும் புதரிலும் நடந்து சென்று, எதிரேயிருந்த நெடிய பாறையின் முன்பு நின்றுக்கொண்டு, “ஓ ஸிம்ஸிம், திற!” என்று கூறினான்.

உடனே, பாறையில் பெரிய வாயில் ஒன்று தோன்றிற்று. அந்த வாயிலில் பொருந்தியிருந்த பாறை, திருடர் தலைவனின் சொற்களால் ஒரு கதவு போல் உட்புறம் சென்றுவிட்டது. தலைவன் அந்த வாயிலடியில் நின்றுகொண்டு மற்றவர்கள் எல்லோரும் உள்ளே சென்ற பிறகு, தானும் உள்ளே சென்றான். உடனேயே பாறை தானாகவே வாயிலை அடைத்துக்கொண்டது. திருடர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/9&oldid=511521" இலிருந்து மீள்விக்கப்பட்டது