பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

மகதத்திலே தோன்றிய கட்டடங்கள், மாளிகைகள், அரண்மனைகள், அணைகள், மதகுகள் முதலியவைகளைப் பார்த்தால், அங்குப் பொறியியல் நிபுணர்கள் நிறைந்திருந்தனர் என்பது புலனாகும். ஒரே பெரும் பாறையைச் செதுக்கிப் பெரிய கம்பமாக அமைக்கும் கைவினையும், சிலைகள் அமைக்கும் சிற்பக் கலையும், மற்றும் பல நுண்கலைகளும் அங்கே சிறப்புற்று வளர்ந்துவந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, பகவான் புத்தரும், மகாவீரரும் பல்லாண்டுகள் வாழ்ந்து, முறையே பௌத்த தருமத்தையும், சமண சமயத்தையும் பிரசாரம் செய்த புனித நிலம் மகதம். புத்தர் ஞானமடைந்த தலமாகிய புத்தகயை அங்கேதான் உள்ளது. மகதத்தின் பழைய தலைநகரான இராஜ கிரகத்தில் இருந்து ஆட்சி புரிந்துவந்த பிம்பிசாரர் பௌத்த தருமத்தை மேற்கொண்டு, பகவானின் தலைசிறந்த அடியாருள் ஒருவராக விளங்கினார். மகாவீரர் பிம்பிசாரரின் பட்டத்து அரசிக்கு நெருங்கிய உறவினர்; இந்திய நாட்டின் முதற் பொருளாதார நிபுணர் என்று போற்றப் பெறும் சாணக்கியர், தமிழ் நாட்டின் பகுதியாயிருந்த மலையாளத்திலே பிறந்தவர். எனினும், அவர் வாழ்க்கையின் பெரும் பகுதி மகதத்திலேயே கழிக்கப் பெற்றது. இந்தியாவின் முதல் சக்கரவர்த்தியாக விளங்கிய சந்திரகுப்தர் மகத மன்னரே யாவார். உலகிலே எட்டுத் திசைகளிலும் இணையற்ற சக்கரவர்த்தியாயும், மாமுனிவராயும் வாழ்ந்த அருள் அசோகரும் அந்நாட்டு மன்னரே. பாடலிபுத்திரம் இப்பொழுது பாட்னா என்று பெயர் பெற்றுள்ளது. மொத்தத்தில்