பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தோன்றுவதில்லை; மழை தவறாமல் பெய்வதால், பயிர்களின் விளைவுக்குக் குறைவில்லை.

‘இங்கே நெய்யப்பெறும் மஸ்லின்கள் நான் மற்ற நாடுகளிலே பார்த்தவைகளிலெல்லாம் மென்மையானவை. கைவினைஞர்கள் தொழில் நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளனர். அரசவையில் மக்கள் அணிந்திருக்கும் உடைகள் தங்க ஜரிகை வேலைப்பாடுள்ளவை. அவைகளில் மதிப்புயர்ந்த மணிகளும் கோக்கப் பெற்றுள்ளன. மருத்துவக்கலை சிறந்து விளங்கியது. பாம்பு விடத்திற்கு நம் கிரேக்க மருத்துவர்களைப் பார்க்கிலும் அதிகப் பயன் தரும் மருந்துகளை இங்குள்ள மருத்துவர்கள் அறிந்திருக்கிறார்கள்.’

பாடலி, பாடலிபுத்திரம், குசுமபுரம் என்று அதற்குப் பல பெயர்கள் உண்டு. ஆனால், ஒரே பொருளைக் கொண்டுதான் அப் பெயர்கள் அமைந்தன என்று தெரிகின்றது. நகரிலும் நகரைச் சுற்றிலும் மலர்கள் நிறைந்த பாடலி மரங்கள் அதிகம். மற்றும் செடிகளிலும் கொடிகளிலும் பூக்கள் புன்னகை புரிந்து கொண்டேயிருக்கும். வண்டுகள் பாடுவதும், மந்த மாருதத்தால் பூங்கொடிகள் ஆடுவதும் கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கும். எனவே, பூக்களின் பெயரையே கொண்ட அந்தப் பூநகர் தன் பெயருக்கு ஏற்ற எழிலனைத்தையும் பெற்றது என்று கூறலாம்.

அத் திருநகர் சோனை ஆறும் கங்கையும் கலக்கும் கூடலுக்கு அருகில் சோணையின் வடகரையில் அமைந்திருந்தது. இரண்டு ஆறுகளும் பின்-