பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

னால் தம் போக்கில் மாறிவிட்டன. தற்காலத்துப் பாட்னா நகருக்கு 19 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கடல் ஒதுங்கியுள்ளது. பாடலி இந்தியாவிலேயே பெரிய நகரம் என்று மெகஸ்தனிஸ் குறித்துள்ளார். நகரைச் சுற்றிலும் பாதுகாப்புக்காகப் பெரிய மரக்கட்டைகளால் மதில்கள் அமைக்கப் பெற்றிருந்தன. மதில்களுக்கு அப்பால், 180 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் ஆழமுமுள்ள அகழி அமைந்திருந்தது. மாமன்னராகிய அசோகர் காலத்தில் மர மதில்களை ஒட்டி வெளிப்புறத்தில் காரையாலும் கற்களாலும் பெரிய கோட்டை அமைக்கப்பெற்றதுடன், நகரிலும் அவற்றால் மாட மாளிகைகளும் கட்டப் பெற்றன. நகரில் நேரான அகன்ற சாலைகள் இருந்தன. உலகின் பல பகுதிகளிலிருந்தும் வணிகர்களும், யாத்திரிகர்களும் அங்குக் குழுமியிருந்ததால், வாணிகம், உச்சநிலையிலிருந்தது; சாலைகளில் எந்த நேரமும் வண்டிகளின் போக்குவரத்தும் அதிகமாயிருந்தது.

நகரில் சந்தைகளும், கடைத்தெருக்களும் நிறைந்திருந்தன, அவைகளில் முத்தும், பவளமும், வயிரமும், மணிகளும், தந்தம், தங்கம், வெள்ளியினாலான அணிகளும், பட்டும், சல்லாவும், பாண்டிய நாட்டுப் பருத்தி ஆடைகளும், வாசனைத் திரவியங்களும், மருந்துகளும் இரும்பிலும் உருக்கிலும் செய்த ஆயுதங்களும், ஏராளமான உணவுப் பொருள்களும், காய்களும், கனிகளும், மற்றும் உள்நாட்டுப் பொருள்களும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த பொருள்களும் நிறைந்-