பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மையான தண்டனைகள் விதிக்கப் பெற்றன; அவர்கள் திருடர்களாகவே கருதப் பெற்றனர். திருடர்களின் உறுப்புக்களை அரிதலும், மரண தண்டனை அளித்தலும் அக்காலத்திய தண்டனைகள்.

நகரில் வேடிக்கைகளுக்கும் விளையாட்டுக்களுக்கும் குறைவில்லை. இக்காலத்திய குதிரைப் பந்தயங்களைப் போல அக்காலத்திலும் இருந்தன. சில சமயங்களில் தேர்களில் இரண்டுபக்கம் குதிரைகளைக் கட்டி, நடுவில் உயர்ந்த காளையையும் கட்டி ஓட்டுவார்கள். விலங்கினங்களைச் சண்டை செய்ய விட்டு வேடிக்கை பார்த்தலும் உண்டு. இத்தகைய சண்டைகளில் களிறுகள், காண்டா மிருகங்கள், காளைகள், ஆட்டுக் கிடாக்கள் முதலியவை கோரமாக முட்டியும் மோதியும் சண்டை செய்யப் பழக்கப்படுத்தப் பெற்றிருந்தன. பிற்காலத்தில் அசோகர் தீவிரமான பௌத்த தருமப் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியதும், இவையெல்லாம் அவர் ஆணையினால் நிறுத்தப்பெற்றன.