பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

செய்ய நேர்ந்தது. முதலில் தரியஸ் என்ற பாரசீக மன்னர் ஏராளமான நிலப்படைகளையும், கடற்படைகளையும் கொண்டு தாக்கினார். ஏதன்ஸ் நகருக்கு 32கிலோ மீட்டர்வரை அவர் வெற்றியுடன் சென்று திரும்பினார். அவருக்குப்பின் அவர் மகன் ஸெர்ஸஸ் உலகிலேயே பெரும்படை என்று சொல்லத்தக்க படையுடன், யவன நாட்டின்மீது போர் தொடுத்தான். பல சிறு இராச்சியங்கள் அவனுக்கு அடி பணிய ஆயத்தமாயிருந்தன. அந்த நேரத்தில் ஸ்பார்ட்டாவில் ஆண்டுவந்த இரு மன்னர்களில் ஒருவனான லியோனிதாஸ் என்ற வீரன் 10,000 வீரர்களுடன், தன் படையைப் பார்க்கினும் பதின் மடங்கு பெரிய படையை எதிர்த்து நிற்கத் தீர்மானித்தான். மலைகளுக்கும் கடலுக்கும் நடுவிலிருந்த தெர்மோபிலே என்ற கணவாயைக் காத்து, பாரசீகப் படை முன்னேறிவராமல் தடுக்கும் பொறுப்பை அவன் மேற்கொண்டான். ஒடுங்கிய கணவாய் ஆதலால் ஒரே சமயத்தில் எதிரிகள் பெருவாரியாக உள்ளே நுழைய முடியாது என்றும், தானும் தன் படைவீரர்களும் இடைவிடாது போரிட்டு, எதிரிகள் வர வர அவர்களை அழித்து விடலாம் என்றும் அவன் எண்ணியிருந்தான்.

டல் அலைகளைப்போல் பெருகி நின்ற தன் சேனையைச் சொற்பமான ஸ்பார்ட்ட வீரர்கள் எதிர்த்து நின்றதைக் கண்ட ஸெர்ஸஸ் நகைத்துத் தன் ஆயுதங்களைக் கைவிடும்படி லியோனிதாஸுக்குச் சொல்லியனுப்பினான். அந்த ஸ்பார்ட்ட வீரன், “இங்கே வந்து அவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அறைகூவினான். கணவாயில்