பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அதனிடத்தில் அவனுக்கு அளவற்ற அன்பு இருந்து வந்தது. அவன் இங்தியாவுக்கு வந்திருக்கையில், ஒரு போரின் நடுவில், அது கீழே சாய்ந்து இறந்து போனதால், அதன் பெயரால் 'பூஸி பாலஸ்' என்று ஒரு நகரத்தை அவன் நிறுவினான் என்பதிலிருந்து, அதன் மீது அவன் கொண்டிருந்த பற்று எவ்வளவு என்பது தெளிவாகும்.

யவனர்கள் ஒரே இனத்தினராக, ஒரே நாட்டில் வசித்து, ஒரே மொழியைப் பேசி வந்த போதிலும், ஆதியில் அவர்களிடம், தே சி ய ஒருமைப்பாடு இருக்கவில்லை; எனினும் சில இன்றியமையாத செயல்களுக்காக அவர்கள் கூடுவதும் வழக்கம். அத்தகைய செயல்களில் ஒன்று ஒலிம்பியா என்ற இடத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டி. அதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மல்லர்களும், விரர்களும் அங்குத் திரள் திரளாகக் கூடிப் பந்தயங்களில் கலங்து கொள்வர். ஒரு சமயம் அலெக்சாந்தரின் நண்பர்களும் அவனும் அங்கு நடை பெற்ற ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். அதற்கு அவன், அதிலே கலந்துகொள்வோர் அனைவரும் அரசர்களாயும், அரசகுமாரர்களாயும் இருந்தால், தானும் செல்ல முடியும் என்று தெரிவித்தானாம். சிறு வயதிலேயே அவனுக்கு அவ்வளவு பெருமித உணர்ச்சி இருந்தது.

சந்திரகுப்தருக்குச் சாணக்கியர் வாய்த்திருந்தது போல, அலெக்சாந்தருக்கு அரிஸ்டாட்டில் என்ற அறிஞர் குருவாக அமைந்திருந்தார். ஆனால்,