பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

டோனியப் படையின் பயிற்சி அமைய வேண்டும் என்பதில் அலெக்சாந்தர் பிடிவாதமாயிருந்தான். அந்தப் படையில், நீண்ட சதுரமாக நின்று போராடுவதற்கு மாசிடோனியர்கள் தனிப்பிரிவாக அமைந்திருந்தனர். பாரசீக வீரர்களைக் கொண்டு குதிரைப் படை மிகவும் விரிவாகியிருந்தது. வில் வீரர் பலர் கடற்படைக்கு அனுப்பப் பெற்றனர். பாரசீகத்தில் கொள்ளையிடப் பெற்ற பெருஞ் செல்வங்களால் படை வீரர்கள் பேராசை கொண்டு, ஒழுக்கம் குறைந்து காணப்பட்டதால், வண்டி வண்டியாக வந்து கொண்டிருந்த அப்பொருள்கள் அனைத்தையும் தீயில் எரித்துவிட வேண்டும் என்று அலெக்சாந்தர் கட்டளையிட்டான். முதலில் தனக்குரிய பொருள்களை எரிக்கும்படி கூறி, அவன் மற்றவர்களுக்கு வழிகாட்டினான். அடுத்தாற்போல் அவன் தன் படையைக் கிழக்கே திருப்பி, வடமேற்கில் காவக் கௌஷான் கணவாய்களின் மூலம் இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் புகுவதற்கு ஏற்பாடு செய்தான். அவனுக்கு முன்னதாக ஹெபாஸ்டியன், பெர்டிக்கஸ் என்ற இரு தலைவர்களுடன் போர்த் தளவாடங்களும், ஊர்திகளும், பெரும் படைகளும் கைபர்க் கணவாய் வழியாகச் சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு அனுப்பப் பெற்றன.

இந்தியாவின் வடமேற்கில் பஞ்சாபிலிருந்த சில நகரங்களை அலெக்சாந்தர் கைப்பற்றி அக்காலத்தில் அசுவகனி என்று அழைக்கப் பெற்ற ஆப்கனிஸ்தான மன்னனான அசுவஜித்தின் படையை வெற்றி கொண்டான். அப்பொழுது