பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

தாக வதைத்திருக்கலாம். மாண்டு விழுந்த யானைகள் போக, எஞ்சியவைகளை யவனர்கள் பிடித்துக் கொண்டனர்.

யவனரின் அம்பு மழையையும், ஈட்டிகளையும் தாங்காமல் திரும்பி ஓடிய சில யானைகள் போரஸின் படைகளுக்கே சேதம் விளைத்ததாகவும் சொல்லப்படுகின்றது. யவன வரலாறுகளில் இந்தப் போரைப் பற்றிய பல விவரங்கள் இருப்பினும், களத்திலே நடந்த நிகழ்ச்சிகள் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.

அலெக்சாந்தர் தன் குதிரைப் படையுடன் இந்தியக் குதிரைப் படையின் வலப் பக்கத்தில் புகுந்து தாக்கினான். அதே சமயத்தில் பின்புறத்திலிருந்தும் ஒரு யவனக் குதிரைப் படை தாக்கிக் கொண்டிருந்தது. பல மணி நேரம் மிகக் கடுமையான போர் நடந்தது. அலெக்சாந்தர், தன் குதிரை இறந்துபோன போதிலும், தன்னிடம் குவிந்திருந்த ஏராளமான படைகளைக் கொண்டு, பலவிதமான புதிய போர் முறைகளைச் செய்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இறுதியில் இந்தியப் படைகள் சலிப்படைந்து களைத்துப் போய்விட்டன. 3,000 இந்தியக் குதிரை வீரர்களும், 12,000 காலாட் படையினரும் களத்தில் மடிந்ததுடன், 9,000 காலாட் படையினரும் எதிரிகளிடம் சிறைப்பட்டனர். போரஸ், கடைசிவரை முன்னணியில் நின்று போராடியதில், அவரது இடத் தோளில் காயம் பட்டிருந்தது; உடலில் வேறு எட்டுக் காயங்களும் இருந்தன. மேற்கொண்டு வெற்றிக்கு வழியில்லை என்று தெரிந்தபின், அவர் தமது

1155---3