பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

களான செலியூகஸ், பெர்டிகஸ், நீயார்கஸ், பியூ செஸ்டஸ் முதலியோரும் அவன் வென்ற நாடுகளின் ஆட்சிப் பொறுப்பைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். பின்னர் அந்தப் பேரரசே சிதறுண்டு போயிற்று. தளபதிகளே ஒருவரோடு ஒருவர் போராடினர். அவர்கள் தங்கள் இராச்சியங்களைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர், யவன நாட்டையே உரோமானியர்கள் பிடித்துக் கொண்டனர் என்பதையும் வரலாற்றில் காண்கிறோம்.