பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. முதல் இந்தியப் பேரரசு

லெக்சாந்தருக்கு முன்னர் யவன நாடு பல இராச்சியங்களாகச் சிதறிக் கிடந்தது போலவே, அக் காலத்தில் வட இங்தியாவும் இருந்தது; பல அரசர்கள் ஒற்றுமையின்றிப் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். அந்நிலையில், திடீரென்று பெரும் புயல் வீசியது போல, மிக்க தொலைவிலிருந்து அலெக்சாந்தர் படையெடுத்து வந்தான். அவனுடைய போர் முறைகளும், முற்றுகைகளும் உறங்கிக் கிடந்த மக்களை விழிப்படையச் செய்தன. பல மன்னர்கள், இரத்தினங்களிழைத்த மரக்கால்களைப் போல, முடிகளைத் தாங்கிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றும், நாடு ஒரே பேரரசின் கீழ் ஒற்றுமைப் பட்டிருந்தால்தான் வெளியார் படையெடுப்பைத் தடுக்க முடியும் என்றும் உணரும் நிலை ஏற்பட்டது.

அந்த நிலையைச் சந்திரகுப்தர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவர் பழைய நந்த வமிசத்தைச் சேர்ந்த மகாநந்தியின் வழிவந்தவர்; மகத அரசில் அவருக்கு உரிமை இருந்தது. ஆனால் அப்-