பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. பேரரசர் அசோகர்

பதினாயிரக் கணக்கான மன்னர்களின் பெயர்களிடையே, அசோகரின் பெயர், தனியாக, ஒரு தாரகை போல் ஒளி வீசுகின்றது என்றும், ருஷ்யாவிலுள்ள வால்கா நதியிலிருந்து ஜப்பான் நாடு வரையிலும் அவருடைய திருப்பெயர் இப்பொழுதும் பாராட்டப் பெறுகின்றது என்றும் உலக சரித்திர ஆசிரியரான எச். ஜி. வெல்ஸ் குறித்துள்ளார். வெற்றியடைந்த பின்னர்ப் போர் முறையைத் துறந்த அரசர் அசோகர் ஒருவரே என்றும் அவர் திருக்கிறார்.

பல வகையிலும் பெரும் புகழுக்கு உரியவரே அசோகர். ‘எல்லா மனிதர்களும் என்னுடைய குழந்தைகள்’ என்று அவர் ஒரு கல் தூணில் எழுதி வைத்திருக்கிறார். எழுத்தில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் அவர் அவ்வாறே வாழ்ந்து காட்டினார். மக்களின் நலமே தம் நலம் என்றும், மக்களாகிய உயிரைத் தாங்கும் உடலைப் போன்றவரே மன்னர் என்றும் அவர் உணர்ந்திருந்தார். ஊன் கொழுத்து, உடல் பருத்து வாழ்வதே