பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கொள்ளவும், அதைப் போற்றிப் பின்பற்றவும் முடிந்தது என்று கருத இடமுண்டு.

அசோகருக்கு இரண்டு நூற்றாண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர் கெளதம புத்தர். அவரும், அசோகரைப் போல, கபிலவாஸ்துவில் ஆண்டு வநத சுத்தோதன மன்னரின் மைந்தரான இளவரசர். உலகில் மக்கள் படும் அவதிகளைக் கண்டு, பிறப்பு, மூப்பு, பிணி, சாக்காடு முதலியவற்றின் காரணத்தை அறிந்து, பிறவாப் பெருநிலையை அடையும் ஞானத்தைப் பெற வேண்டும் என்று அவர், நாடு துறந்து, காட்டிலே ஆறு ஆண்டுகள் அருந்தவம் செய்தார். பின்னரே அவருக்கு ஞானோதயம் உண்டாயிற்று. அது முதல் அவர், தமது எண்பது வயதுவரை, பல இடங்களுக்கும் கடந்து சென்று தருமப் பிரசாரம் செய்து வந்தார். காணும் துன்பங்கள்,அத்துன்பங்களிலே பெருந் துன்பமாகிய மரணம் ஆகியவை தொலையவேண்டுமானல், பிறப்பே தொலைய வழி காணவேண்டும் என்றும், பற்றற்ற வாழ்க்கையே முடிவிலாப் பேரின்பமாகிய நிருவாணத்தை அளிக்கும் என்றும் பற்று விடுவதற்கும், ஒழுக்கமாக வாழ்வதற்கும் எட்டுப் படிகளாக அமைந்த 'அஷ்டாங்க மார்க்கம்' தக்க வழி என்றும் அவர் மக்களுக்கு உபதேசம் செய்து வந்தார். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த மன்னர் பிம்பிசாரர், பெளத்த தருமத்தை மேற்கொண்டு, பெருமானுக்கு வேண்டும் உதவிகளைச் செய்து வந்தார். மகத நாட்டில் புத்தரைப் பின்பற்றிய துறவிகளான பெளத்த பிக்குக்களுக்குப் பல விகாரங்களும், ஆராமங்களும் அமைந்தி-