பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. மாநிலம் போற்றும் மகத நன்னாடு

பொன்னாடு என்று எந்நாடும் போற்றும் பெருமை மிக்கது நம் தாய்நாடு. வீரத்திலும் தீரத்திலும் வண்மையிலும் திண்மையிலும் உயர்ந்த நாடு நம் பாரதம். பண்டைக் காலத்திலேயே நம் நாடு பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய நகரங்களைக் கொண்டிருந்தது. அவற்றுள் ஒன்று பாடலிபுத்திரம். மகதப் பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரம் மாற்றலர் கண்டு மலைக்கும் கோட்டையுடையது. கோட்டையில் வானோங்கி வளர்ந்த ஐந்நூற்றெழுபது கோபுரங்களும், அறுபத்து நான்கு வாயில்களும் உண்டு. நகரின் நடுவில், எழில் மிகுந்த அரண்மனையில், நவரத்தினங்கள் இழைத்த தங்கமணித் தொட்டிலில் கண்வளர்ந்து கொண்டிருந்தான் குழந்தை அசோகன் கைகளிலே ஒலிக்கும் முத்து வளையல்களும், கால்களிலே ஒலிக்கும் சிலம்புகளும் அணிந்து, பொன்னாடை புனைந்த பெண்மணிகள் பலர் சூழ்ந்து நின்று, இன்னிசை யாழ்போல் தாலாட்டுப் பாடித் தொட்டிலை ஆட்டிக் கொண்-

1155-1