பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

படைத் தலைவராய் இருந்த சமயம், அவர் கலிங்கத்தைத் தாக்கி வென்றார். பின்னர் அமைதி நிலவியிருந்தது. அளவிடற்கரிய பெரிய படைகளுடன், அவற்றிற்கு வேலையேயில்லாமல், பாடலிபுத்திரத்தில் அசோகர் வாளா அமர்ந்திருக்க முடியவில்லை. வாய்ப்புக் கிடைத்ததும், கி. மு. 262 இல் அவர் கலிங்கத்தைத் தாக்கி வென்றார். அவருக்குப் பின் கலிங்க மன்னர் காரவேலர் கி. மு. 162 இல் மகதத்தின்மீது படையெடுத்து வென்றதாகவும் சரித்திரம் கூறும். ஆகவே இருபக்கத்தாரிடையிலும் படையெடுப்பு அக்கால வழக்கப்படி நடந்து வந்துள்ளது. சுருங்கச் சொன்னால், கலிங்கத்தின் வீரமே அதன்மீது பிறர் பன்முறை படையெடுத்து வரக் காரணமாயிருந்தது எனலாம். ஒவ்வொரு போரிலும், கலிங்கர் மிடுக்குடன் எதிர்த்து நின்று வீரப்போர் புரிந்திருக்கின்றனர். எத்தனை முறை தோல்வி கண்டாலும், சூழ்நிலை மாறியவுடன், அவர்கள் மீண்டும் நிமிர்ந்து நின்று விடுதலை பெற்று வந்தனர்.

அசோகரிடம் எப்பொழுதுமே நாற்படைகளையும் சேர்த்து ஆறு இலட்சத்திற்குக் குறையாத போர் வீரர்கள் இருந்து வந்தனர். அவர்களிலே பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, அவர் கலிங்கத்தின்மீது படையெடுத்து வந்தார். கலிங்கம் வட கலிங்கம், தென் கலிங்கம், நடுக் கலிங்கம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. தமிழ் நூல்கள் ஏழு கலிங்கம்' என்று ஏழு பிரிவுகளைக் கொண்டதாகவும் கூறும். அக்காலத்தில் கலிங்க மன்னனிடம் 60,000 காலாட்படையும், 1,000 பேர்-