பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

அசோகர் அமைத்த விகாரங்கள் எண்ணற்றவை. அவை பின்னால் அழிந்து போய்விட்டன. ஆனால், அவர் நிறுவிய அழகிய வட்ட வடிவமான தூண்களிலே சில இன்னும் இருக்கின்றன. அவர் 84,000 தூண்களைக் கட்டியதாக ‘அசோகாவதானம்’ என்ற நூல் கூறுகின்றது. நாட்டின் பல பகுதிகளிலே அவர் தூண்களை நிறுவினார் என்பதை அந்நூல் மிகைப்படுத்திக் கூறியிருக்கலாம்.

அசோகர் அமைத்த தூண்களிலே மிகவும் புகழ்பெற்றது போபால் இராச்சியத்திலுள்ள சாஞ்சித் தூண். இது குன்றின் மேல் அமைந்தது. சிவப்புக் கற்களால் கட்டப் பெற்றுள்ள இதன் உயரம் 23 மீட்டர்; அடிப்பாகத்தில் இதன் சுற்றளவு 36 மீட்டர். சுற்றிலும் கற்களால் அமைந்த காப்புச்சுவர் உண்டு. அதில் 10 மீட்டர் உயரமுள்ள வாயில்கள் அமைந்துள்ளன. வாயில்களின் மேலே பலவித அலங்காரமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சாஞ்சியிலுள்ள பழைய கம்பத்தின் அருகில் 1952 இல் இந்திய மகாபோதி சங்கத்தார் புதிதாக ஒரு விகாரம் அமைத்துள்ளனர். புத்தர் பெருமானின் முதன்மைச் சீடர்களாகிய சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் ஆகிய இருவருடைய அஸ்திகளும் அங்கே அடக்கம் செய்யப்பெற்றுள்ளன.

அசோகர் இரு பெரு நகரங்களை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அவை காஷ்மீரத்தின் தலைநகரான ஸ்ரீநகரும், நேபாளத்திலுள்ள தேவபட்டணமும் ஆகும். தேவபட்டணத்-