பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

டிருந்தனர். சிறிது தூரத்திலே நின்று அக்காட்சியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார் சக்கரவர்த்தி சந்திரகுப்தர். அசோகனைப்போல் அவர் குழந்தையா யிருந்தபொழுது, மாடுகளுக்குப் புல்வைக்கும் மரத்தொட்டியே அவருக்குத் தொட்டிலாக இருந்தது. அவருடைய அன்னை அச்சமயம் வனத்திலே ஒரு குடிசையில் வாழ்ந்திருக்க நேர்ந்ததால், அவர் அத்தகைய ஏழ்மையில் வாழ வேண்டியிருந்தது. அவர் தம் அருமைப் பேரனுக்காகத் தங்கத் தொட்டில் மட்டுமன்றி, அவன் செங்கோல் செலுத்துவதற்காக மகதப் பேரரசையும் அமைத்து வைத்திருந்தார்.

தொட்டிலிலே துயின்ற குழந்தையைப் பார்த்து அவர் பெருமிதம் கொண்டார். அப்பொழுது அவர் என்ன எண்ணியிருப்பார் என்பதை நாம் இக்கற்பனை மூலமே கண்டுகொள்ள முடியும்:

‘குழந்தாய்! என் செல்வமே! மோரியர்தம் குலக் கொழுந்தே! அசோக வர்த்தனா! உன் சிறிய தோள்கள் இந்தப் பெரிய ஏகாதிபத்தியத்தை எப்படித் தாங்கப் போகின்றன? தங்குவதற்கு ஓர் அடி நிலம்கூட இல்லாமல் நாட்டிலிருந்து துரத்தப் பட்ட நான், உனக்காக மிக்க பரப்பினை உடைய மகதப் பேரரசை அமைத்திருக்கிறேன். என் செல்வமே! உன் தந்தை பிந்துசாரனும் பல போர்களில் வென்று ‘அமித்திர காதா’ (பகைவர்க்கு எமன்) என்னும் பட்டம் பெற்று விளங்குகிறான். ஆதலால், நீ செய்ய வேண்டிய போர்கள் அதிகமில்லை. நம் ஆட்சி பாரசீகத்தின் தென் எல்லையி-