பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

பல்கலைக் கழகம் அமைந்திருந்த நாலந்தாவிலும் அசோகர் பல பெரிய கட்டடங்கள் கட்டியிருந்தார், அங்கு நடந்து வரும் புதைபொருள் ஆராய்ச்சியினால் நமக்கு மேலும் பல விவரங்கள் தெரிய வரலாம்.

அசோகர் அமைத்த அரண்மனைகள், விகாரங்கள் முதலியவற்றை நாம் காண முடியாவிட்டாலும் அவரால் நடப்பெற்று ஓங்கி உயர்ந்து நிற்கும் கல் தூண்களிலே இன்னும் சில இருக்கின்றன. மிகவும் பாரமுள்ள ஒரே கல்லில், சிங்கம் முதலிய உருவங்கள் அமைந்த வேலைப்பாடுள்ள சிகரத்துடன் தூண்கள் செய்து, அவற்றில் தம் சாசனங்களைச் சிற்றுளியால் வரைந்து வைப்பதில் அசோகர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தார். முப்பதுக்கு மேற்பட்ட அத்தகைய கல்தூண் சாசனங்களில் பதின்மூன்று அகப்பட்டிருக்கின்றன. இந்தத் தூண்களைப் பளபளப்பாக இழைத்து, பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் குறித்த இடங்களுக்கு அசோகருடைய பொறியியல் வல்லுநர்கள் எப்படித்தான் கொண்டுபோய்ச் சேர்த்தனரோ என்று வியக்கும்படி அவை உள்ளன. இத்தகைய கல்தூண் ஒன்றின் சிகரத்திலுள்ள மூன்று சிங்கங்களே இன்று சுதந்தர இந்திய அரசாங்கத்தின் சின்னமாக விளங்குகின்றன. அசோகர் செதுக்கி வைத்த தரும சக்கரமும் நம் நாட்டுக் கொடியின் நடுவில் இடம் பெற்றிருக்கின்றது.

பாறைகளிலே அசோகர் பொறித்து வைத்த இருபத்து மூன்று கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பெற்றிருக்கின்றன. மூன்று குகைகளிலே சிறு கல்-