பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

வழக்கம் என்றும், அதற்கும் முன்னர் அசீரியாவில் அம்முறை இருந்தது என்றும் வரலாற்று ஆசிரியர் கூறுவர். எந்த நாட்டு முறையா யிருந்த போதிலும், அசோகர் கற்களிலே தம் செய்திகளை எழுதி வைத்ததால்தான் அவை நெடுங்காலம் நிலைத்திருக்க முடிந்தது. ' கல் மேல் எழுத்து’ அழியாமலிருக்கும் என்று பலரும் நம்புதல் இயல்பு. ஆனால் எழுத்தைத் தாங்கி நின்ற கற்களே காணாமற் போய்விட்டால் என்ன செய்வது ? அசோகர் நட்டுவைத்த தூண்களில் சில உடைந்து போய்விட்டன; சில மண்ணுக்குள் மறைந்திருக்கின்றன. புத்தர் பிரான் தோன்றிய உலும்பினியில் அவர் நட்டிருந்த தூண் கீழே சாய்ந்து, அதன் மேல் பல நூற்றாண்டுகளாக மண் குவிந்து, அதை மூடிவிட்டது. மண்ணைத் தோண்டிப் பார்க்கையில் அக்கம்பம் அகப்பட்டது. இல்லையெனில் அசோகர் அங்கே சென்றிருந்த விவரம் தெரியாமற் போயிருக்கும். தவிரவும், உலும்பினியில் பகவான் புத்தர் பிறந்த இடமும் தெரிந்திராது.

அசோகருக்குப் பகவான் புத்தரிடம் அளவற்ற பக்தி இருந்ததுடன், பெளத்த சமயத்தைப் பரப்பவும் அவர் அரும் பெரும் முயற்சிகள் செய்து வெற்றியும் கண்டார். அவரது காலம்வரை பெளத்த சமயம் வட இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே பரவியிருந்தது. ஜனக முனிவரைப் போல் பேரர ச ரா கி ய அ வ ரே துறவியாகிப் பிரசாரம் செய்ய முற்பட்டதால், பெளத்தம் நாடெங்கும் பரவவும், காஷ்மீர், நேப்பாளம், சீனா , சிங்களம் முதலிய நாடுகளிலெல்லாம் பரவவும் வழி பிறந்தது.