பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

பின்னர்ப் பதினெட்டு நூற்றாண்டுகள் கழிந்த பின், பாரத நாட்டுப் பேரரசரான அக்பரிடமும் அத்தகைய சமய சமரசத்தைக் காண்கிறோம்.

கல்வெட்டுக்களிலே சுவர்க்கம், நரகம், தேவர்கள், தெய்வங்கள் என்றெல்லாம் அசோகர் கூறிய சொற்களைக் கொண்டு, அவர் பெளத்த தருமத்தில் முழுவதும் ஈடுபட்டவ ரல்லர் என்று கருதிவிடக் கூடாது. அவரது சமயக் கொள்கையில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த போதிலும், அக்காலத்திய மக்களுக்கு உடனே தெளிவாக விளங்குவதற்காக அவர் அச்சொற்களைப் பயன்படுத்தியதாகவே கொள்ளவேண்டும். சுவர்க்கமும் நரகமும் தனித் தனி உலகங்களாக இருக்க வேண்டியதே யில்லை. இந்த உலகிலேயே சீலம் பேணி, அறவழியில் நிற்பவர் சுவர்க்கத்தைக் காணலாம்; அல்லாதவர் நரகத்தைக் காணலாம். மேலும் இந்துக்களும் பிறரும் சுவர்க்கம், மோட்சம், முத்தி என்று கூறுவதைப் பெளத்தர்கள் 'நிருவாணம்' என்பார்கள்.

அசோகரது மனப்பான்மை தெள்ளத்தெளிவாகத் தெரிவிக்கப் பெற்றுள்ளது.எவரும், தம் ச ம ய த் தை யே பெரிதெனப் போற்றி, பிற சமயங்களை இழித்துப் பேச வேண்டா என்று அவர் கேட்டுக்கொண்டார். எவரெவர் எந்தெந்தச் சமயத்தைச் சேர்ந்திருந்தாலும், அதில் தீவிரமாக இடைவிடாமல் மேலோங்கித் திளைக்க வேண்டும் என்பதே அவர் நோக்கம். பிரமகிரி முதலாவது பாறைக் கல்வெட்டில், 'ஜம்புத் தீவில்