பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

லிருந்து விந்திய மலை வரையிலும், அசுவகனியிலிருந்து (ஆப்கனிஸ்தானம்) காமரூபம் (அஸ்ஸாம்) வரையிலும் பரவியுள்ளது. இனி நீ வெல்ல வேண்டிய இரு இராச்சியங்களே உள்ளன. அவை தெற்கேயுள்ள கலிங்கமும், திராவிடமும்.

‘யவன வீரனான அலெக்சாந்தரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நீ அவனைப்போல் வரவேண்டும் என்பதே என் ஆவல்.

‘துயிலும் பொழுதே நீ புன்னகை புரிவதைப் பார்த்தால், என்னையும் நீ வென்று விடுவாய் என்று ஏளனம் செய்வதுபோல் தோன்றுகின்றது. போர்களிலே என்னைப் பார்க்கிலும் அதிக வெற்றிகளை நீ பெற முடியாது. எனக்கு நல்லமைச்சராக இருந்த சாணக்கியர் நீ அரியணை ஏறும் வரை இருப்பாரோ, என்னவோ? ஆனால் அவர் எழுதி வைத்துள்ள ‘அர்த்தசாத்திர’ ஏடு உள்ளது. அதன்படி அரசியல், பொருளாதாரச் செய்திகளை ஐயம் திரிபுகள் அறக் கற்று, அதைத் துணையாகக் கொண்டு ஆட்சிபுரிந்தால், பேரரசு மக்கள் அனைவருடைய அன்பையும் நீ பெறமுடியும். ஆட்சி முறை ஒன்றிலேயே நீ என்னையும், உன் தந்தையையும், முன்னால் இருந்த பாரத நாட்டு மன்னர்களையும் வெல்ல முடியும்.’

சந்திரகுப்தர் மகதராச்சியத்தைப் பெரிய பேரரசாக அமைப்பதற்கு முன்னும் பின்னுமாக அஃது ஆயிரம் ஆண்டுக்காலம் நிலைபெற்று நின்றது. மகதம் என்பது இப்பொழுதுள்ள பீகார் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மகதத்-