பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

கண்காணித்து வரவேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. மேலும் தண்டனை அடைந்தவர்களின் நிலைமையை அறிந்து பரிகாரம் செய்யவும் அந்த அதிகாரிகள் உதவியாயிருந்தார்கள்.

மாநிலத் தலைமை அதிகாரிகளாக விளங்கிய மகாமாத்திரர்களுக்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப் பெற்றிருந்தன. ஏனெனில் பல பிரதேசங்களில் அவர்களே மக்களின் நன்மை தீமைகளே விசாரித்துக் கண்டு கொள்ளக்கூடும். அரசப் பிரதிநிதிகள் மூலமே யன்றி, பேரரசரின் நேரிலும் அவர்களுக்கு ஆணைகள் பிறப்பிக்க முடியும். அரசப் பிரதிநிதிகளும், மகாமாத்திரர்களும் பின் பற்றவேண்டிய சட்டங்கள் எவை? வேறு பல அரசர்கள் சட்டங்களை அவ்வப்போது ஏட்டில் எழுதுவார்கள். ஆனால், அசோகரோ அவற்றைக் கற்களிலே நிரந்தரமாகத் தீட்டிவைத்து விட்டார். ஆகவே அவரிடம் இருந்த அதிகாரங்கள் சட்டம் இயற்றல், பாசன வசதிகள் அமைத்தல் முதலிய மராமத்து வேலை, தருமப் பாதுகாப்பு ஆகியவை. இவற்றுடன் பெளத்த சங்கத்திற்கும் அசோகரே சமயத் தலைவராயிருந்து கட்டளைகள் செய்து நிறைவேற்றி வந்ததால், அஃதும் அவர் பொறுப்பில் சேர்ந்தது. அங்த முறையில் அவர் அரசியல் தலைவராயும், சமயத் தலைவராயும் விளங்கி வந்தார். அடிக்கடி அவர் தாம் சுற்றுப் பிரயாணம் செய்ததுபோல் மற்றும் பெரிய அதிகாரிகளும் நாடெங்கும் சுற்றி வரவும் ஏற்பாடு செய்திருந்தார்.

பேரரசரின் அலுவல்களுக்கு உதவியாளராக இக்காலத்தைப் போல, அப்போது காரியதரிசிகள்