பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

‘இந்தியர்கள் எல்லாரும் சுதந்தர மக்கள்; அவர்களில் ஒருவர்கூட அடிமையில்லை’ என்று அரியன் என்னும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தனிச் சொத்துக்கள் வைத்துக் கொள்ளலாம்; தங்கள் உழைப்புக்குத் தக்கபடி ஊதியமும் பெற முடியும். முன்னோர் தேடிவைத்த செல்வத்தை அவர்களுடைய பரம்பரையினர் பெறவும் உரிமை உண்டு. இங்ஙனம் அசோகரின் அரசியல் தன்னிகரற்றுத் தழைத்து விளங்கியது.