பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்னும் பொன் மொழிக் கிணங்கக் குடிமக்கள் அரசரைத் தெய்வமாகப்போற்றி அவர் அறிவுரைப்படி நடந்தனர். அசோகரின் புகழ் மணம் அவனி யெங்கும் பரவியது. சரித்திரச் சோலையிலே அசோகரின் வரலாறு என்றும் வாடாமலராகப் பூத்துக் குலுங்கும் என்பதில் ஐயமில்லை.