பக்கம்:அலைகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
 நடக்க வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் முழுக்க முழுக்க நல்லவனும் இல்லை; கெட்டவனும் இல்லை. லோக ஸ்ருதியின் இயக்கத்தான் விதி. லோக ஸ்ருதியில் அது அது அதனதன் இடம் தவறாது சரியாய்த்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தொகுதியே லோக ஸ்ருதிக்குச் செலுத்தும் அஞ்சலி என நிச்சயமாய்க் கொள்ளலாம்.

கட்டிடம் முடிந்து கொண்டே வருகையில் ஒரொரு சாரமாய் தட்டிக்கொண்டே வரவேண்டியது தானே? தெய்வ நிலையை எய்தியபின் அதையும் தட்டிவிட நமக்கு துணிச்சல் வேண்டாமா? அந்த நிலையை நாம் இதுவரை அடையாது இருப்பின் அது நம் மனப்பரப்பு குறுகி இருப்பதால் தான், மன வளர்ச்சி எல்லையற்றிருக்கும்வரை அதுவே தம் பாக்யம், தைரியம், உயிருக்கே ஊக்கம்; எல்லாமே. இதுவேதான் அலைகளின் ஸ்ருதி; பின்புலன்.

லா.சா.ராமாமிருதம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/10&oldid=1298487" இருந்து மீள்விக்கப்பட்டது