பக்கம்:அலைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண்டாளு



தோ பாரம்மா, இப்பவே கண்டிப்பா சொல்லிட்டேன்; ஆம்புள்ளேப் புள்ளையாப் பெத்துக்கிட்டுவா பொட்டைக் குட்டியானால் கையால் தொடக்கூட மாட்டேன்.” காப்பி வடிகட்டியை இழுத்து இழுத்துத் தேய்த்துக் கொண்டே ஆண்டாளு கட்டளையிட்டாள்.

'அது ஏது? அந்தப் பக்கம் ஒரே பெண்மயம்னா! எப்படி ஆகிறதோ?' பஞ்சாமி ஆபீஸுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

“எனக்கென்னவோ ஆம்புளேப் பசங்க மேலேதான் ஆசை. அம்மாக்கு கொளந்தே வேலை ஒண்ணு வெக்க மாட்டேன். பையன் நம்ம இடுப்புலேயேதான் சவாரியாயிருப்பான்

"நீ ஏதோ கோட்டை கட்டிக்கொண்டேயிரு! உன் எசமானியம்மாளுக்கும் கூடப்பிறந்தவங்க எல்லோரும் பெண்கள். முன்னாலேயும் பெண். பின்னாலேயும் பெண்."

சுசிக்குக் கோபம் வந்தது. “ஆமாம், நீங்கதானே எல்லோருக்கும் வரன் தேடி, கட்டிக்கொடுத்து கஷ்டப் பட்டேள்!”

“சரி சரி, உன்னைக் கட்டிக்கொண்டு உங்கப்பாவுக்கு ஒரு சுமை குறைத்தேனே போதாதா?’-பஞ்சாமி 'குஷி'யில் இருந்தான். இன்றைக்து சமையல் பலே 'ஜோர்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/102&oldid=1155488" இலிருந்து மீள்விக்கப்பட்டது