பக்கம்:அலைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 O லா. ச. ராமாமிருதம்



“ரெட்டேன்னு சொல்லும்மா. இங்க வாம்மா. என்னோட நிலைக்கண்ணாடியண்டை நின்னு பாரு. ரெண்டு பேரும் ஒரே ஒசரம், ஒரே தாட்டி, தெரியல்லே? முந்தா நா கொடுத்தியே ஒரு ரவிக்கை எனக்கே அளவு எடுத்து தச்ச மாதிரி அச்சா இருந்திச்சு!”

"ஊருக்குப் போய் திரும்பி வரப்போ இன்னும் ரெண்டு, மூணு நல்லதாக் கொண்டு வரேன்."

"உன் பிரியம்."

தனிக் குடித்தனம் வைத்த புதிதிலேயே ஆண்டாள் வந்துவிட்டாள். அவள் வேலைக்கு வந்து அமர்ந்த விதமே தனி. கருவேப்பிலை விற்றுக்கொண்டே வாசற்படி ஏறியவள் வீட்டு எசமானி கூடத்தில் படுத்திருக்கக் கண்டாள். சுற்று சாமான்கள் வாரியிறைந்து கிடந்தன. சுசிக்கு மசக்கைக் கோளாறு. அப்போதுதான வாந்தியெடுத்துக் களைத்துப் போயிருந்தாள். ஆண்டாளு கூடையை அப்படியே கீழே வைத்தாள். ஐந்து நிமிஷம் பம்பரமாய் ஆடினாள். சாமான்களை எடுத்து அடுக்கி ஒழுங்குபடுத்தினாள். முற்றத்தில் போட்டிருந்த புடவை. வேஷ்டியைக் கசக்கிப் பிழிந்து, விரித்து அங்கேயே குறுக்கே கட்டியிருந்த கம்பிக்கொடியில் இழுத்து பிடித்து உலர்த்தினாள். உடனே மூலையில் சார்த்தியிருந்த துடைப்பத்தைப் பிடித்துப் பெருக்க ஆரம்பித்து விட்டாள்.

குப்பையைத் தள்ளிக்கொண்டே அவள் பக்கமாய் வருகையில், "என்னம்மா! உடம்பு எப்படியிருக்குது? நான் தொட்டுப் பார்ப்பேன். ஆனால், நீங்கள்ளாம் பாப்பாராச்சே ஒட்டிக்கிட்டா?’’ -

சுசிக்குத் திகைப்பில் அடைத்துப்போன வாய் இன்னும் திரும்பவில்லை.

என்னத்தைக் கொடுப்பது எவ்வளவு கொடுப்பது? கேட்கவும் அஞ்சினாள். காட்ரெஜ் பீரோ-பஞ்சாமி ஆபீஸ் சகாக்கள் சேர்ந்து பணம் போட்டு வாங்கிக் கொடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/104&oldid=1288259" இலிருந்து மீள்விக்கப்பட்டது