பக்கம்:அலைகள்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


108 இ லா. ச. ராமாமிருதம்

கசி, இன்று காலையில் பருப்புசிலி நன்றாகப் பண்ணி யிருந்தாய். ஆபீஸுக்குப் போகும் அவசரத்தில் அனுபவித் துச் சாப்பிட முடியவில்லை. இப்போ கொண்டு வா. சாதத் தில் பிரட்டி, காப்பிக்கு முன்னால் ஒரு உருண்டை ஒரு டென்னிஸ் பால், டி.பன் மாதிரி அடிக்கிறேன்.”

சரிதான், ஆண்டாளுக்குத்தான் கொஞ்சம் வெச்சிருக் கேன். அதற்குப் பூனையாட்டம் வட்டமிடவேண்டாம். இதென்ன முச்சந்தி மூணு வேளையும், குழந்தை பருப்புஞ் சாதத்துக்கு அழற மாதிரி! காலையில் பண்ணினது இன்னும் அப்படியே உக்காந்திருக்குமா?”

தர்க்கமும் மொணமொனப்பும் ஒயும் தறுவாய்க்குச் சற்று சமாதானம் பண்ணுகிற மாதிரி, சரி. வேனுமானால் ஏதாவது டியன் பண்ணிடறேன். உங்களுக்குத்தான் குழம்புமா உப்புமா உசிராச்சே! இன்னி சாயங்காலம் ஜவுளிக் கடைக்குப் போவோமா? என்றாள் சுசி.

“ஏன் உங்கப்பா வைத்திருக்கிறாரா?” இந்தக் குத்தலை வாங்கிக்கொள்ளாதது மாதிரியே, “அத்தரதையா ரவிக்கையே இல்லை.”

இதென்ன அக்ரமம்: முந்தா நேற்றுக்கூடப் பார்த் தேனே, உன் பெட்டியை ஒழித்து அடுக்கிக்கொண்டிருந் தையே, ஒரு போர் இருந்ததே!”

“எல்லாம் பழசு, ஆண்டாளுக்குக் கொடுத்துட்டேன்.”

‘பழசா? எல்லாம் கல்லாட்டம், அத்தனையுமா?”

  • அத்தனையுமாம்! சுண்டைக்காய் எத்தனை? உங்கள் கூட்டமே அல்பக் கூட்டம்தானே!”

ஆண்டாள் வந்ததிலிருந்தே, சுசிக்கு வாய் அதிகரித்து விட்டது.

இப்படியே, காரணம் ஸ்பஷ்டமாய் உணர முடியாமலே அவனுக்கும் ஆண்டாளுக்குமிடையில் ஊமைப் பகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/108&oldid=666826" இருந்து மீள்விக்கப்பட்டது