பக்கம்:அலைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தபஸ்
டந்ததெல்லாம் நடந்த பிறகு...


என்னினைவின் முகட்டில் தோன்றுவது ஒரு பெரும் நிலைக்கண்ணாடி, கோவிலில் அம்பாள் சன்னதிக்கெதிரில் இருப்பதுபோல் நான் என்னைக் காண்கிறேன்.


நீறு துலங்கும் என் வெண்ணெற்றியின் இருமருங்கிலும் கருமை செழிந்த மயிர், சுருட்டை சுருட்டையாய் விழுகின்றது. நான் அதை வெட்டவுமில்லை, வழிக்கவுமில்லை. நேரே தூக்கிப் பின்புறமாய் சீவி விட்டிருக்கிறேன். நீண்டு வங்கி வங்கியாய் வளைவுகொண்ட கேசம், எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.


நீறு துலங்கும் என் வெண்ணெற்றியில் புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு திகழ்கின்றது.


---நான் அழகன்.


--- நான் பிரம்மசர்யன்.


---ஆம். நான் வீணாகவில்லை. என் மனைவியைக் கல்யாணத்தில் ஒமப் புகையில் கண்ட பிறகு மறுபடியும் நான் கண்டதில்லை. நாங்கள் சின்னஞ்சிறு வயது.


ஆயினும் நான், அவள் என்னிடம் வரும் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/11&oldid=1112604" இருந்து மீள்விக்கப்பட்டது