பக்கம்:அலைகள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆண்டாளு இ 3ே

அப்படியே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தனரோ?

அவள் புன்னகை மாறவில்லை. சாவகாசமாய்த் திரும்பி னாள். அவள் இடை மிடுக்கா ய் ஒடிந்தது. ரேழி வாசற்படி தாண்டுமிடத்தில் தாழ்வாரத்துச் சுவரில் இந்த வீட்டில் அவள் புகுந்தபோது மாட்டிய அவளுடைய கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு நடைதாண்டி இருளில் மறைந்தாள்.

வாசல் கதவு திறந்து மூடியது.

கூடை மாட்டியிருந்த வட்டமான அடையாளம் சுவரி விருந்து சிரித்தது.

பொறி கலங்கி அங்கேயே நின்றான்.

கிராமத்தில். வாய்க்காலில் குளிக்கையில், பாசி கும்பி யுடன் யானைக் காதுகள் போலும் இதழ்களுடன் வேர் கழன்று சிரித்தபடி, வெள்ளைப் புஷ்பம் மிதந்துவரும்

அதன் பேர் என்ன? எங்கிருந்து வருகிறது? எங்கே போகிறது..... 9 -

D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/115&oldid=666834" இருந்து மீள்விக்கப்பட்டது