பக்கம்:அலைகள்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நெற்றிக் கண் இ 17

பிணைந்தன. பட்டு பூச்சிகள் ஒன்றுடனொன்று ஒட்டிப் பறந்தன. அதோ, அந்த மரத்தின் மறைவில், கலைமான், பேடையைத் துரத்துவதேன்? வானமே, வையத்தைப் புல்லி அதன் மேல் கவிந்து குவிந்து குலவியது. இப் புலவியின் பெரு மிதத்தில் பூமி, பூவும் பச்சையுமாய்ப் பொங்கி வழிந்தது. இது அத்தனையும் பொய்யா? ஏ. கடவுளே, இத்தனையும் உன் செயல்தானே? எல்லாம் பொய்யென்று போதித்து விட்டு கையில் ஒடும் எடுத்துவிட்டாயே? இப்போது என்ன செய்வாய்?

அடிபட்ட சிங்கம் போன்று, பகவான் மூச்சு வாங்கிய வண்ணம், ஒர் அரச மரத்தடியில் விழுந்தான். அவனது சிருஷ்டி அவனை ஏளனம் செய்தது.

முட்புதரில், ஸ்பரிச வேதனையே படாது, மலர்ந்து வெற்றியுடன் நகைக்கும் ரோஜாவை யொத்து, அவள் கை கெட்டாது புஷ்பித்திருந்தாள். அவளது நினைவில் கமழ்ந்த மணத்தின் இன்பம் தாங்கமுடியவில்லை. அவளைப் பறித்து முகராத ஒவ்வொரு விநாடியும் தாளமுடியவில்லை. மூர்க்க வெறி அவ்வாண்டியைப் பிடித்து அலட்டியது. அவன் மயக்கு அவளிடம் பலியாததில், அவனது வேதனை அதிகரித்தது. தான் வந்த காரியத்தை மறந்தான்; தன்னை மறந்தான்.

கட்செவி உணர்வது போன்று, அவள் அங்கே வருவதை அவன் எப்படியோ உணர்ந்தான்.

ஆம், அவள்தான்; இடுப்பில் குடத்தை யூன்றி சரிந்து, நடந்து அவனிடம் நடந்து வரவில்லை. அவனைப் பார்க்கவு மில்லை. குடத்தைக் கரையில் வைத்துவிட்டு, தடாகத்தில் இறங்கினாள். அவள் புனர் ஸ்னானம் செய்வானேன்?

அவளைத் தரிசிக்கும் ஆவலும் அவசியமும் தூண்ட, பகவானும் எழுந்து ஆடையைக் களைந்து, கெளபீனதாரி

அ.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/119&oldid=666838" இருந்து மீள்விக்கப்பட்டது