பக்கம்:அலைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெற்றிக் கண் O 121

 ஒடும் வேகத்தில், அவளது ஆடை புதர்களில் சிக்குண்டு கிழிந்தது. அவளது வெண்தொடை பளிரென மின்னிற்று.

“ஆணை! ஆணை!! -நான் தொழும் தெய்வத்தின் மேல் ஆணை! -தொடாதே -ஐயோ!"

வேர் தடுக்கிற்று என்னத்தையோ அணைப்பது போன்று, கைகளை வீசி, குப்புற வீழ்ந்து மூர்ச்சையானாள். துரத்திலிருந்து அவளை நெருங்குகையிலே, அம்மரத்தடியில் வீற்றிருக்கும் ஒரு மணல் விங்கத்தை அவளுடைய கரங்கள் தழுவியிருப்பதைக் கண்டான்.

அவள் தொழும் தெய்வம்!

வள் அதை அந்தரங்கத்துடன் நம்பிக் கதறிய அபயத்தின் வேகம், அவனது வேஷத்தை, அவனையறியாமலே உரித்துவிட்டது. அவன் வந்து அவளண்டை நின்றபொழுது, ஜடையும் கங்கையும் சூலமும், மானும் மழுவும், பாம்பும் தாங்கி, பரமசிவனாய் நின்றான். அவன் மனதில், ஆச்சரியம் வெட்கம், துயரம் இன்னும் பல்வேறு உணர்ச்சிகள் பொங்கியெழுந்தன.

அவன் அவளை அழித்தான்; நெற்றிக் கண்ணால் சுட்டு எரித்தான். வேறு வழியில்லை?

சர்வ ஜீவராசிகளும் வாழ்க்கையில் சறுக்கி விழுந்தும், தட்டுத்தடுமாறிச் சேர முயலும் லட்சியத்தின் சிகரம் அவன். அந்த லட்சியத்தின் தோல்வியாய் அவன் இப்பொழுது நின்றான். ஆதலின், அந்த நினைவை அழிக்க, அவளை, அழிப்பது தவிர வேறு வழியேது? நெற்றிக் கண்ணைத் திறந்து அவளைச் சுட்டெரிந்தான்.

சகலமும் அவனுக்கு அடக்கம்: அவன் அவனது நெற்றிக் கண்ணுக்கு அடக்கம், தன்னுடன் சமரிட்ட மாறனை எரிக்கவோ, வாதில் வென்ற கீரைை ஒறுக்கவோ, தான் கட்டுக் கடங்காது தெறிக்க முயலும்பொழுது, அதை அழிக்கவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/123&oldid=1288278" இலிருந்து மீள்விக்கப்பட்டது