பக்கம்:அலைகள்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாற்று இ 137

இப்பவும் மாமி கண்ணில் படவில்லை. மாமியின் வேலையே, முழுக் கவலையே சோடையே இல்லாமல் தன்னைத் துடைத்துக் கொள்வதுதானா?

வேப்பிலை எங்கேடி? பெண்ணும் பிள்ளையும் சேர்ந்து மனையில் பார்க்க வேண்டாமா? இந்தச் சமயத்துக்கு எத்தனை நாளாய்க் காத்திருப்ப ஸ்?”

அம்மாவுக்குக் குரல் கம்மிற்று. வேப்பிலை மாமி கோவிலுக்குப் போயிருக்கா!'-ஒரு வாண்டு கீச்சுக் குரலில் கத்திற்று.

மாமா போனபிறகு இன்றுதான் மாமி கோவிலுக்குள் காலை வைத்திருக்கிறாள்-அம்பாளுக்கு நன்றி செலுத்த.

கோவிலுக்குப் போகாவிட்டாலும் மாமி மனசு எங்கே என்று தெரிகிறதா?

பெண்ணும் மாப்பிள்ளையும் கூடத் தவறாமல் கோவி லுக்குப் போவார்கள். நான் கடையில் உட்கார்ந்திருப்பேன். அவர்களிடையே தங்களை மறந்த ரகஸ்யம் அப்படி என்ன ஓயாமல் இருக்கும்? அவள் பக்கமாய் அவன் தலை சற்றுச் சாய்ந்திருக்கும். அவனை அண்ணாந்து பார்த்து மலர்ந்த அவள் முகத்தில், மணிக்கூண்டில் ஒளிக்கதிர் போன்று திடீர் திடீர் என உவகை பொங்கி மங்கும். பீறிடும் சிரிப்பை அடக்க இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொள்வாள். கை மறைவினின்று கண்கள் பளபள வென எட்டிப்பார்க்கும், நெற்றிக் குங்குமம் கண்போல் உயிர்வீசும் அவர்களையறியாமலே தோளோடு தோள் இடிக்கும்.

இது விளம்பரமல்ல. இடமும் வேளையும் பொருந்தி, பருவம் கண்ட நிறைவு. நியாயமாய், தைரியமாய், தாராளமான அளவில் பாத்திரம் மீறி வழியும் இளமையின் இயல்பு.

அப்போ நான் மாத்திரம் கிழவனா? இல்லை, வாசற் குறட்டில் தேங்காய் பழம் விற்றுக் கொண்டிருக்கிறேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/139&oldid=666859" இருந்து மீள்விக்கப்பட்டது