பக்கம்:அலைகள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாற்று இ 139

திடீரென அபிதா என் அப்பா காலில் விழுந்து எழுந் தாள்.

‘இப்போ நான் வாழ்வது நீங்கள் கொடுத்த வாழ்க்கை. அதை நான் காப்பாற்றிக் கொள்ள வேணும். ஆகையால் தேங்காயின் மூணு கண்ணும் முழுசாப் பார்த்துக் கொடுங்கள்’’

தட்டை ஏந்தி, அம்பாளிடம் தன் பங்கு நியாயத்தைக் கேட்டு வாங்கிக் கொள்ளும் தீர்மானத்துடன், விர்ர்ரென்று அவள் நடந்து செல்கையில்-வருணஜபத்திற்கு இலையில் அரிசியைப் பரப்பி, அதன் மேல் வைத்த தண்ணிர்க் குடத் தினின்று விசிறி உழும் மாவிலைக் கொத்துப்போல், பச்சைப் பசேலெனத் துல்லியமான ஒரு விறு விறுப்பு அவளிடம் மிளிர்ந்தது. முகத்தில் தனிக்களையும், மேனி மினுமினுப் பும்

மறுபடியும் அதே, அர்த்தமற்ற பிதற்றலாய்ச் சந்தேகம் என்னுள் எழுந்தது; அபிதா என்கிறவளே. நிஜம்தானா? அல்லது ஒரு தோற்றமா?

அப்புறம் ஒரு நாள் மாமி என் வீட்டுக்கு வந்திருந்தாள். நான் தேங்காய் பிடிக்கப் பக்கத்துணர்ச் சந்தைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன்.

அம்மாவின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, * நீங்கள் தான் வரணும். எல்லாம் உங்கள் கைராசி, ஆசீர் வாதமாய்த்தான் இருக்கணும். அபிதாவை எடுத்துக் கொடுத்த உங்கள் கையேதான் அபிதாவுக்கும் பிள்ளைப் பேறு பண்ணிக் கொடுக்கணும்’ என்றாள் மாமி.

ஓ! சந்தை பூராச் சுற்றியும், தேங்காய் வினை தகைய வில்லை. நேரமானதுதான் மிச்சம். வெறுங்கையோடு திரும்பினேன்.

தெருவின் திருப்பத்திலேயே. ஒரு பயங்கரமான கூச்ச லில் தெருவே கிடுகிடுத்தது. வேப்பிலை மாமியை எட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/141&oldid=666862" இருந்து மீள்விக்கப்பட்டது