பக்கம்:அலைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்று O 147

 புதிதாய்க் கட்டிக் கொண்டாற்போல், மாமி அடியோடு உருமாறிவிட்டாள்.

உடலில் சதை பிடித்து முகம், உடல் எல்லாம் நிரவிக் கொண்டு, இளமைகண்டு. முன்னைவிட நன்றாய் நிறத்துக் கொண்டு, பளபளவென்று இப்போது காண்பதுபோல்மூணு நாள் ஆகாரமில்லாவிட்டாலும் மேனி தளர்வதில்லை.

ஆண்டவன் தேற்றும் விதமே தனி, அவன் அமைதியை அருளும் வழியே தனி!

அவர் குரல் சட்டென்று தாழ்ந்தது.

வெள்ளையாய் ஒரு உருவம் கோவிலிலிருந்து வெளிப்பட்டது.

அவனையுமறியாமல் அவன் எழுந்து நின்றான்.

கோமதி உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.

அது அவர்களைத் தாண்டிச் செல்கையில் லேசாய்க் காற்று அவர்களைச் சுற்றி எழும்பி, உடனே ஒய்ந்தது.

இறக்கை வீச்சினின்று முள்மேல் உதிர்ந்த சிறகு போன்று, வெண்மையாய், மிருதுவாய், புரிந்தும், புரியாதுமாய் அவனுள் ஏதோ இதவாய் மிளிர்ந்தது.

☐☐☐
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/149&oldid=1288537" இலிருந்து மீள்விக்கப்பட்டது