பக்கம்:அலைகள்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கண்ணன் இ 151

காலில் முள்குத்தித்தே, அது மாதிரியிருந்தது-அதைவிட சுறீல்- -

  • ஆமாண்ணா, எங்கேண்ணா போவேன்? குழந்தையும் கையுமாய் நிக்கறேன்-’

பேஷ் சுமை வேறையா?-’’ அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாறது...”*

அப்புறம் அதிகமாய் ஞாபகமில்லை. ஏதோ உள்ளே போய் ஒரு கந்தையை அம்மா அவன்மேல் சுற்றினாற் போலிருந்தது. அப்புறம் சாப்பிட்டாற்போலிருந்தது பழையது. அப்புறம் துக்கக்கலக்கம். கூடம் தூண், கூடத் திலே மாட்டியிருக்கிற படமெல்லாம் ஒரே சுத்தல், நடுவில் நடுவில் மாமாவுக்கும் அம்மாவுக்கும் வார்த்தைகள்துணுக்குகள்-தண்ணியிலே பேசறாப்போல...

  • சரி, இந்த ருக்மிணியைத் தூக்கிண்டு போன அந்தக் கிருஷ்ணன் எங்கே? இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா?”

அம்மா ஏன் தேம்பி தேம்பி அழறா? அம்மா அழா

தேம்மா, எனக்கும் அழுகை வரது பயமாயிருக்கு அழாதேம்மா

  • அண்ணா சொல்லாலே வதைக்காதே $ fr

போயிட்டா. ஒரு நாள் சாயந்திரம் வேலை செஞ்சுட்டு மாரடைக்கறதுன்னு உட்கார்ந்தா. தீர்த்தம் கொண்டு வரத் துக்குள்ளே அப்படியே தூணிலே சாஞ்சுட்டா-’

‘மாப்பிள்ளை எந்த ஆ பீ சு க் கு ப் போயிட்டு வந்தாரோ?’’

  1. 3

ஹோட்டல்லே வேலை. அம்மா குரல் கொஞ்சம் வெடிப்பாத்தான் வந்தது. வேறே உத்யோகம் கிடைச் கிருந்தால் தேவலைதான்-’

“ஆங்காரத்தைப் பார். ஆங்காரம் என்னவேண்டிக் கிடக்கு? எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/153&oldid=666879" இருந்து மீள்விக்கப்பட்டது