பக்கம்:அலைகள்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 இ லா. ச. ராமாமிருதம்

பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா நீ இப்படி நடுத்தெருவிலே நிப்பையா? நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகனுமா?’’

அண்ணா ஒனக்கு எப்படித்தான் மனஸ் வந்தது, அந்தக் கிழவனுக்கு என்னை நிச்சயம் பண்ண?--

ஆமாண்டி. இப்போ மா. த் தி ர ம் ரொம்ப வாழறையா? அப்புறம் தெரியவில்லை. அம்மாவினுடைய அழு குரலைத் தவிர, அதுவும், கொஞ்சங் கொஞ்சமாய் விசித்து விசித்து. அப்புறம் ஞயாகமில்லை. மூடின கண்ணுக் குள்ளே மெத்து மெத்துனு ஒரே ரோஜா சிவப்பு, அதுக் குள்ளே அமுங்கிப்போனதுதான் தெரியும். அவ்வளவுதான்.

அப்புறம் ராத்ரி ராத்ரி நான் துரங்கிப்போய்விட் உேன்னு அம்மா நினைச்சுண்டிருக்கும் பொழுது மறுபடியும் விக்இ விக்கித் தேம்பி தேம்பி அழுகை என் கன்னத்தில், கண்மேல் ஒண்னு ரெண்டு ‘கறில், சுறில் நெருப்புப் பொறி.

அம்மா ஏன் அழறாள்? அம்மாவுக்கு மார் வெடிச் கடுத்தா? அவனுக்கு துக்கம் தொண்டையை அடைக்கும். ஆனால், ஏன் அழறேன்னு கேட்க பயமாயிருக்கும். கேட்க லாமா வேண்டாமா? என்ன கேக்கறது. எப்படி கேக்கற துன்னு யோசனை பண்ணிக் கொண்டிருக்கையிலேயே கண் னுக்குள்ளே, மெத்து மெத்துனு ரோஜா சிவப்புலே குளு குளுன்னு நீலம் கலந்து அதன் உள்ளே ஆமே தெரியாமல் அமிழ்ந்து போவான்.

அம்மா ஒவ்வொரு சமயம் ஆவேசம் வந்தாற்போல் இறுகத் தழுவிப்பாள். மூச்சுகூடத் திணறும். அது பிரியமா. அல்லது எதையாவது பார்த்துப் பயந்து, நான் அவளைக் கட்டிக்கிற மாதிரி என்னைக் கட்டிக்கறாளா? கால் சறுக் கிட்டா கை எதைவேணாப் பிடிச்சுக்கத் தவிக்கிறதே, அம்மா அதுமாதிரி என்னைப் பிடிச்சுக்கறாளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/154&oldid=666881" இருந்து மீள்விக்கப்பட்டது