பக்கம்:அலைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 O லா. ச. ராமாமிருதம்



மாதிரி வெள்ளை வெளேரென்று கன்னத்துக்குள்ளேயிருந்து சிவப்பு டால் அடிக்கும். அம்மா ரொம்ப ரொம்ப அழகாய்ப் போயிட்டா. அம்மா இப்போல்லாம் அழறதில்லை. பேசறதில்லை. தூங்கறதுகூட இல்லை. அவனுக்கு ராத்திரி முழிப்பு வரப்போல்லாம் அவள் உட்கார்ந்திருக்காள்’ தூணிலே சாஞ்சிண்டு முழங்கால்மேல் கையைக் கோத்துண்டு ஆகாசத்தைப் பார்த்துண்டு...

சாப்பிடுவதுகூட இல்லை. மாமா ஒரு ஒருநாள் கத்துவார். "பண்ற அக்ரமமெல்லாம் பண்ணிப்பிட்டு இப்போ சாப்பாட்டு மேலே ராங்கி வந்துடுத்தோ? தவிடு தின்கறதிலே ஒய்யாரம் வேறயா?’’

ஆனால், அம்மா பதில் பேசறதில்லை. அப்புறம், ஒருநாள். அவள் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் நேரத்தில் அம்மா ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.

"கண்ணா, வா-" என்று கூப்பிட்டாள். போனேன். ஆசையாய்க கட்டிண்டு இரண்டு கன்னத்திலும் கண்ணிலும் முத்தமிட்டு, போ"ன்னாள்..


ரு நாளைக்கும் இந்த மாதிரி அணைச்சுக் கட்டிண்டு முத்தங் கொடுக்க மாட்டா. தினம் "போயிட்டுவா’’ என்பாள். இன்னிக்கு "போ"ன்னு மாத்திரம் சொன்னாள்.

அவன் வீட்டிற்குத் திரும்பி வரும் பொழுது வாசலில் ஒரே கூட்டம். மாமா அவனைத் தூரத்தில் கண்டதுமே அவசரமாய் ஓடி வந்து, "அம்மங்கா, அம்மஞ்சி எல்லோரும் விளையாடிண்டிருக்கா. நீயும் போய் விளையாடு" என்று அழைச்சுண்டுபோய், மேலத்தெருவில் ஒரு வீட்டில், தன் குழந்தைகளுடன் சேர்த்துவிட்டுட்டு போயிட்டார். அப்புறம் மறுநாள் காலையில்தான் கூட்டிண்டு வந்தார். அன்னி ராத்ரி பாயஸம் இருந்தது. ஜவ்வரசி பாயஸம்: அப்புறம் பத்து பண்னிரண்டு நாள் பொறுத்து, பஷணம் எல்லாம் இருந்தது. ஆனால், அன்னி மொதக் கொண்டு அம்மா இல்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/156&oldid=1288544" இலிருந்து மீள்விக்கப்பட்டது