பக்கம்:அலைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 O லா. ச. ராமாமிருதம்

 சின்னவரு அகல் விளக்கைத் தூண்டறாரு, என்னை இன்னும் நல்லாப் பார்க்க. அண்ணனும் தம்பியும் என்னைப் பார்த்துப் பார்த்து என்னவோ கிசுமுசுன்னு பேசிக்கறாங்க. மூத்தவர் தன் காதை மடிச்சுக் காட்டறாரு. தம்பி தன் தாடையிறக்கத்துலே தட்டி காட்டறாரு என்னைக் கேஸ் புடிச்சுக் கொடுக்கப் போறாங்களா? நான் என்ன தப்பு செஞ்சிட்டேன்? என்ன செஞ்சிருந்தாலும் இவங்களுக்கு எப்படித் தெரியும்?

ஆனா தப்பு செஞ்சாத்தான் 'தண்டா'வா? நாணயத்தைவிடக் கேஸ்தானே முக்கியம்? ‘செஞ்சியா செஞ்சியா?'

"எசமான் என்னை அடிமேல் அடி அடிக்காதீங்க. அடிச்சே கொன்னு போடாதீங்க. கொன்னு போட்டாலும் என்ன செஞ்சேன்னு சொல்லுங்க; செஞ்சதைத் தெரிஞ்சுகிட்டு சாவறேன். என்ன செஞ்சேன்?

“அது உனக்குத் தெரிஞ்சு ஆவ வேண்டியதில்லே. செஞ்சேன்னு ஒத்துக்கோ.”

ஈ தானே போலீஸ் தர்பார்! செஞ்சியோ இல்லியோ மூணு மாசம் உள்ளே தள்ளிட்டான்னா கஞ்சியோ களியோ மூணு மாசம் வவுத்துக்குக் கவலையில்லே. இதுவரையும் நான் போனதில்லே. ஆனால் போனவங்க அப்படித் தானே சொல்லிக்கிறாங்க, வவுத்துக் கொடுமையை நினைச்சுப் பாத்தா இதுவரைக்கும் போகாதது நம் தப்புத் தானே! புளைப்போ ஆண்டிப் புளைப்பு. உண்றதோ இரந்து. ஆனா இதிலேயும் ஈனமானம்னு ஏதோ இன்னும் ஒட்டிக்கிட்டு உடல் குன்னுது. இதுவே வெக்கக்கேடாயில்லே, சிரிப்பாக் கூட இல்லே?

‘சாமியாரே, எளுந்து கால்கை களுவறீங்களா?’’

சின்னவரே இந்த வார்த்தை எப்போ வரப்போவுதுன்னு: தானே காத்துக்கிட்டிருக்கேன். ஆனால் கவுரவத்தை விடாமே கனைச்சு நமசிவாயம்னு கூப்பிட்டுகிட்டு எளுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/162&oldid=1288549" இலிருந்து மீள்விக்கப்பட்டது