பக்கம்:அலைகள்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எங்கிருந்தோ வந்தேன் இ 181

திருக்கறேன். என்னவோ நான் கூப்பிட்டவுடனே சிவன் எல்லாத்தையும் தரவன், மேல்முண்டை இடுப்பிலே வரிஞ்சு கட்டிகிட்டு, கைகட்டி வாய் புதைச்சு தவசிப் புள்ளை யாட்டம் என் கால் மாட்டிலே காத்துகிட்டு நிக்கிறாப் போல்.

  • அப்பா!’

சின்னப் பையன் குதித்தெழுந்து ஆண்டியின் கையைப் பிடித்தான். நிமிர்ந்த முகத்தில் ஆயிரம் அலைகள் ஊமை வடிவம் ஆடிப் பாய்ந்தன.

அண்ணன் முகத்தில் திரும்பவும் திகைப்பு சூழ்ந்தது. ஆண்டி மேல் ஆழ்ந்த பார்வையில் லேசாய்ப் பகை கக்கிற்று. பையன் தலையில் காடாய்ச் செறிந்த மயிருள் செல்லமாய்த் தன் விரல்களை விட்டுக் கலைத்துக்கொண்டே இவன் என் மகன். இவன் பேர் நமச்சிவாயம்’ என்றான்.

தம்பியார் தொடர்ந்து: “ஆனால் நாங்கள் பேர் கூப் பிட்டு இவன் எங்களுக்கு ஏன்னு கேட்டு எத்தினியோ நாளாச்சு”...

வெளியே பார்த்து வீடு இம்மாம் பெரிசுன்னு எவன் நினைப்பான்? களுத்துக் குறு கலைக் கணக்குப் பார்த்து நெஞ்சின் ஆழத்தைக் கணிக்க முடியுமா? நடக்க நடக்க வீடு கூடவே வருது. ஒரு ஒரு கட்டும் கோட்டையாட்டம், ஒரு கட்டு, ரெண்டு கட்டு, மூணாங்கட்டு தாண்டிக் கிணறு, அந்தாண்டை புழக்கடை மதில் எங்கே எழும்புது இருட்டிலே தெரியலே. இடையிலே மரமும் செடியும் தென்னையும் வாழையும் இலையும் மட்டையும் படுதாவா ஆடி மறைக் சிட்டு நிக்கிது.

தண்ணியை வாளி வாளியாக இளுத்து மேலே ஊத்திக் கிறேன், ரெண்டு முளுங்கு அள்ளியும் குடிக்கிறேன். பால் தித்திக்குது. அம்மாடி! கண்ணு, வாய், காது, களுத்து, முதுகு, அக்குள் எல்லாம் குளுகுளு

‘இந்தாங்க!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/163&oldid=666896" இருந்து மீள்விக்கப்பட்டது