பக்கம்:அலைகள்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எங்கிருந்தோ வந்தேன் இ 169

ஆட்டுலே மருமவப்பிள்ளை விருந்துக்கு வந்திருக்கார் அல்ல? அப்பன் கிட்டப் பேச்சு கேட்கலாமா?”

சின்னவர் முகம் குருத்தா சுருங்குது. மூனா மனுசன் பிச்சைக்காரன் கிட்ட, வீட்டு மானத்தை கொட்டியாவது கண் ஜாடை காட்டறாரு கையை ஏதோ ஆட்டறாரு: அண்ணன் கடகடன்னு சிரிக்கறாரு.

‘அட நிறுத்தப்பா நாட்டியத்தை! ஆடமாட்டியா? அப்பனுக்கு நீ செல்லம். சின்னதிலிருந்தே சீக்குன்னு உனக்கு நல்ல சாக்காச்சு. அப்பன் தன் கையாலேயே தைலத்தை உன் தலையிலே வெக்கறதும் ஆத்தா உன் முதுகு தேக்கற தும் -ஹல் - கலத்திலே உன் கைவழிய நெய்யைக் கண்டு கண்டே நெய்யைக் கண்டாலே எனக்கு உவ்வே” ஆயுட்டுது. நானும் கண்டுட்டேன், ஒரு ஆள் தலைநிமிர்ந்து நடந்தாலே வயதிலே பெரிய தலை சொன்னதுக்கெல்லாம் ஆமாம் தலையாட்டாமல் எப்பாச்சனுேம் “ஏன்’னு கேட் டாலே வீட்டிலேயே அவன் ஆவாதவன்தான்-’’

இதெல்லாம் எனக்கென்னத்துக்கு? இதெல்லாம் எனக்கா?

சின்னவர் தலை ஆட்டுவிட்டுட்டுது.

‘சாமியாரே உங்களையும் சாட்சி வெச்சுத்தான் பேச றேன். உங்க முகஜாடை எனக்கென்னவோ பளசெல்லாம் நினைப்பு உடைப் பெடுத்துக்கிட்டுது. அப்பன் திண்ணையி லிருந்தா நான் புழக்கடை: அவர் அங்கே வந்தால், நான் புங்க மரத்தடி புள்ளையாரண்டை. ஆனால் ஒண்ணு. அப்பனும் நானும் எலியும் பூனையுமா- அவர் இருக்கற சமயம் வளையிலிருந்து தலையை நீட்டறது: இல்லாத சமயம் அவர் தலையை உருட்டறது-இப்படி வளைய வந்தோமே, இந்தப் பகைக்கு திடமான காரணம் கேட்டா எனக்குத் தெரியாது. பெரியவங்க தங்கள் மரியாதையைக் காப்பாத்தற முறையோ என்னவோ? பெத்தமவனிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/171&oldid=666914" இருந்து மீள்விக்கப்பட்டது