பக்கம்:அலைகள்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


170 இ லா. ச. ராமாமிருதம்

பரிவா ரெண்டு வார்த்தை பேசிட்டா தங்கள் சிகரம் இறங்கிடுமோன்னு பயம்!

‘பெண்டுங்க என்ன வேடிக்கை பார்க்கறிங்க?-’ சின்னவர் எரிஞ்சு விழறாரு

“கலத்தைப்பார்த்து வெக்கறதில்லியா? மாட்டுக்கு வெக்கவா ஆக்கியிருக்கிங்க?”

பொரியலும் சாம்பாரும் இலையிலே பரிவா சாயுது. போதும் போதும், அதிகம் அதிகம்! இலை மேலே அனைச்ச கைமேலே பதார்த்தம் விளுது. இந்த வீட்டுப் பெண்டுக பேசாமடந்தைங்க, அவங்க கைதான் அவங்க வாய்.

“எங்க வீட்டுப் பெரியவர் தன்மை இதல்ல. இன்னிக்கு இவர் நெஞ்சிலே ரத்தம் வடியுது. பேச்சில் கொட்டுது. சமயம் சாப்பாட்டு வேளையாப் போச்சு, மன்னிச்சிடுங்க, மன்னிச்சிடுங்க.’

இப்படி அவங்க கையில் சிப்பலின் உதறல், ஆப்பையின் நடுக்கம் எனக்கு சொல்லுது; கெஞ்சி கேக்குது. அண்ணி புறங்கையில் ஒரு பச்சைத் தேள் கொடுக்கைத் தூக்கிட்டு நிக்குது.

மேலே மலையா கருக்கல் திரளுது: கண்டு மிரண்டு நிலவு கலங்கி நிக்குது.

“அப்பனுக்குத்தான் பிள்ளை விஷம்; ஆனால் பிள்ளை மகன் மிட்டாய்க்கடைப் பொட்டலம்; இதென்ன புதிருங்க? பாட்டனும் பிள்ளையும் இழையறது பாக்கனுமே! சீழோடு சீழாட்டம்னு கேலி பண்ணுவேன். ஒருகணம் பிரியமாட் டாங்க சதையா ஒட்டிக்கிட்டிருப்பாங்க தாத்தாவைப் பேரன் அப்பா'ன்னு அழைப்பான். அவர் இவனை “இரணியன் வவுத்திலே பிரகலாதன்’ என்பாரு. இவன் எச்சிலை அவர் உண்றதும் அவர் எச்சிலுக்கு இவன் குருவி யாட்டம் ஜெவஜெவ'ன்னு வாயைத் திறந்துட்டு இவன் வாயிலே அவர் ஊட்டறதும்-சீ! என் மவன்தான். ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/172&oldid=666915" இருந்து மீள்விக்கப்பட்டது