பக்கம்:அலைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கிருந்தோ வந்தேன் O 171



எச்சில் எனக்குப் பழக்கமில்லையப்பா!’ இவன் என்கிட்ட ஒட்டல்லே. இவன்தான் பாட்டன் தலைமேலே குந்திட்டிருக்கானே? அவனை நான் அண்ணாந்து பாத்திட்டிருக்கேனே!”

ஆனால் என் மவன் அண்ணாந்து பார்க்கத் தகுதியான ஆள்தான். இப்போ வாயடைச்சுப் போச்சு; மனம் நம்ப மறுக்குது; மனம் சமானமாவல்லே. இப்படியா என் மவன் இருந்தான்! ஏத்தச்சாலை சாச்சாப்போல் குளுகுளு கிளுகிளுன்னு எப்படிக் குரல்! என்ன வாக்கு! ஒருநாள் ஐயாவும் பேரனும் குலாவிட்டிருக்காங்க; கேட்டுக்கிட்டே வந்துட்டேன்.

“ஏம்பா, பிறந்தால் செத்துப் போறாங்களே-’’

“எவண்டா சொன்னது? சாவைப்பத்தி இப்பவே உனக்கென்ன?”

‘அட என்னப்பா நீ ஒண்ணு! இல்லாத்தையா சொல்றேன்! எதிர் வூட்டு ஆயா முந்தாநேத்து இறந்துடலே! துக்கிட்டுப் போறப்போ என்னதான் என் மூஞ்சியை நீ மறைச்சாலும் எனக்குத் தெரியாதா? இன்னிக்குக்கூட இந்த வழிதானே ஏணையிலே ஒண்ணு எடுத்துட்டுப் போனாங்களே ! சின்னதோ பெரிசோ பிறந்துட்டாத்தானே சாவறாங்க? முன்னாலே ஏன் பிறக்கணும்?”

பையனை அப்படியே வாரிக்கிட்டாரு. நான் மூக்கிலே விரலை வெச்சேன். அஞ்சு வயசுப்பேச்சா இது? என் பையன் அம்ஷங்க அம்ஷம்!-’’

நிழலடிக்குது, முகம் தெரியல்லே, தண்ணி மேலே ஊதினாப்போல குரல் நடுங்குது; அது தெரியுது,

பையன் சாப்பிடறான். என் மடியில் ஒருகை. அதிலே அவனுக்கென்ன தைரியமோ தெரியல்லே. -

கருக்கல்லே நிலவு புதைஞ்சுட்டுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/173&oldid=1288560" இலிருந்து மீள்விக்கப்பட்டது