பக்கம்:அலைகள்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


172 இ லா. ச. ராமாமிருதம்

- இப்படி என் மவனோடு இருந்துட்டு என் அப்பன் என் மவனை விட்டுட்டு ஓடிட்டான்ய்யா!’

தன்னை பட்டையுரிச்ச மாதிரி திடீர்னு அலறல்! எனக்குப் பூமி கிடுகிடுத்துப் போச்சு. கருக்கல்லே விரிச லாட்டம் மின்னல் கிளை பிரிஞ்சு ஓடுது. வானத்தின் கொசு வாட்டம் தூறல் ஒண்ணு ரெண்டு உதிருது.

இந்த மனுசன் நெஞ்சில் இருள்: ரொம்ப இருள்: ரொம்ப பெரிசு; ரொம்ப பளசு. நெஞ்சின் இளசை நெஞ்சின் இருளில் மறைச்சு தன்னை மறக்கத்தானே மறைஞ்சுட் டான். நிழலாட்டம் முகம் தெரியல்லே. ஆனால் அவன் நெருப்பு என்னைத் தொட்டு உடல்பூரா சுட்டெரிக்குது. மூச்சு ஓடிவந்த மாதிரி இரைக்குது.

“ஒருநாள் உன் மாதிரித்தான் ஒரு பண்டாரம்- உன் மாதிரியில்லே, காவிகட்டி மொட்டை சாமி. ஒருநாள் வந்து ராத்தங்கி மறுநான் காலைபோனது தெரியாது. அப்பவே இது வீடில்லை; ஆண்டி மடம்; சோத்து சத்ரம். ஆனால் வந்த சாமி என்ன கெஞ்சியும் பருக்கை தொடல்லே. பேசக் கூட இல்லே. கைகால் களுவிவந்ததும் நெற்றியிலே கையை ஒட்டி ஜாடை காட்டி விபூதி கேட்டான். திருநீறு பல்லாவை அப்பன் கொண்டு வந்து நீட்டினாரு அதைப் பிடுங்கிக்கிட்டு சோறாட்டம் அள்ளி அள்ளி வாயில் போட்டுக்கிட்டான் பாரு, நாங்க அசந்துட்டோம். சிரிச்சுட்டே நீறை அள்ளி அசப்பிலே அப்பன் முகத்திலே பூ'ன்னு ஊதினான். அப்பன் இருமி கண்ணைக் கசக்கி முளிச்சுப் பார்த்தாரு, அப்போ லிருந்தே அப்பனுக்கு பழைய பார்வை போயிட்டுது. நான் சொல்றது கண் போவல்லே, கண் மாறிட்டுது. பார்வை வேறாயிட்டுது. ஆள் சுயத்திலே இல்லை. சரியா இரை யெடுக்கல்லே, கண்ணுக்குக் கண் பேரன்மேலே கூட கவன மில்லே.

ஏம்பா, நான் இங்கே இருக்கேனே நீ எங்கே பார்க்க றேன்னு? ஆத்திரத்திலே பையன் ஐயா கையைக்கூடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/174&oldid=666919" இருந்து மீள்விக்கப்பட்டது