பக்கம்:அலைகள்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எங்கிருந்தோ வந்தேன் இ 77

சந்தனத்தைப் பூசிக்கிட்டு திண்ணையில் ஏடு படிச்சு விளக்கம் சொல்வி வக்காலத்து:

“ உன் கஸ்டம் உன் வினை என் இஸ்டம். எல்லாம் நான் பிறப்பிச்சுது என் பங்கு, என் விளையாட்டு, நண்டுக் குத் திண்டாட்டம் நரிக்குக் கொண்டாட்டம்தான் நியாயம். இந்த உண்மையை நீ உணர்ந்து, உன் எலும்பு உன்க. ஸ்டத் துக்குக் கெட்டிப்படும் வரை நீ திண்டாடிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான்! அன்னன்னிக்கு அன்னன்னிப் பொழுதா தினம் ஒரு புளைப்பாய், இது பிறப்பா, இல்லை இறப் பான்னு என் பாவம் என் மலைப்பு. என்னை இப்போ மலையா பனிமூடுது. திகில் பிடிச்சு நின்ன இடத்திலேயே “திக்’னு நின்னுட்டேன்

- அப்போ அவுத்துவிட்ட கன்னுக்குட்டியாட்டம் ஒடி வந்து ஒரு தலை என் மடியில் முட்டிச்சு. நான் மூழ்கிப் போவாமே பையனை கெட்டியா கட்டிக்கிட்டேன். பனி கலைஞ்சுது. அவன் முகம்தான் என் சூரியன். பின்னால் அவன் அப்பன் வாயடைச்சு கண் கலங்கி நிக்கிறான்.

எட்டடி எட்ட திடுதிடுன்னு திடீர்னு பூமி கிடுகிடுக்குது. பனி கலைஞ்சு ஏத்தக் கேணி உள் சரிஞ்சு தண்ணி நுரை கக்கிட்டு மேல் எழும்புது. ஆனால் உள் சரிஞ்சு இப்போ பொங்கி வழியுது கேணியா?

நானா?

D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/179&oldid=666928" இருந்து மீள்விக்கப்பட்டது