பக்கம்:அலைகள்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வித்தும் வேறாம் இ 181

இதுவரை அவள் அழுதிருக்கும் அழுகைகளுக்கு நான் எவ் வளவோ பணக்காரனாயிருப்பேன். எங்கள் வீட்டுக் கொல்லைக் கதவிற்குத் தங்கத் தாழ்ப்பாளே பிணைத்திருப் போம், வாடகை வீடானாலும். லைந்தவிக்குச் சிரிக்கவே இடம் கொடுத்திருக்க மாட்டோம்.

| இங்கே நான் சிரிக்கறேனா? சிரிப்பான்னா சிரிக்க றேன்:

இதோ இப்பவே அவள் விழிகள் அழத் தயாராயிருக் கின்றன. விழிமேட்டில் செந்நரம்புக் கொடிகளின் முறுக் கோட்டம் என் கழுத்தைப் பின்னி லேசாய் மூச்சுக் குழாயை யிறுத்துகிறது.

என் விழிகளின் வினாவிற்குப் பதிலான மறுப்பில் தலையை ஆட்டுகிறாள். கீழுதடு பிதுங்குகிறது.

அவளைப் பிரிந்த பெருமூச்சு என்னைத் தொத்திக் கொள்கிறது. ஆனால் என்னிலும் தங்க இடமிலாது என்னின்று எழுகையில், அதன் எரிபாதையில் என் எண்ணங் கள், ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள் யாவும் கருகுவதை உணர்கிறேன்.

“ என்ன சிரிக்கிறேள்? அவள் புருவங்கள் தெரிகின்றன, *சிரித்தேனா என்ன?’ எனக்கே தெரியவில்லை, ஆனால் ஸ்ைந்தவி, உன் கோபம் உனக்கு நகை போட்டாற் போவி ருக்கிறது.’’

வேறென்ன நகை போடுவேள் நீங்கள் !’

இப்போது எனக்குத் தெரிந்தே எனக்குச் சிரிப்பு வருகிறது. -

“'உங்களுக்கு எல்லாம் சிரிப்புத்தான். உங்களுக் கென்ன?’’

ஆமாம் எனக்கென்ன? ஒரு குறைச்சலுமில்லை, ஆபீஸில் என்னவோ அள்ளித்தான் கொடுக்கிறான். ஆனால் விரலிடுக்கில் அத்தனையும் எப்படி வழிந்து போகிறது?

  1. 3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/183&oldid=666937" இருந்து மீள்விக்கப்பட்டது